குள்ளநரியின் தந்திரம்
மலையாளத்தில் - அஷீதா
தமிழில் - உதயசங்கர்
ஒரு நாள் ஆலமரத்தடியில் சின்னுவும்,
நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது குள்ளநரி
மூச்சுவாங்க வேகமாக ஓடி வந்து தலைகுப்புற விழுந்தது. மூன்று பேரும் விளையாட்டை நிறுத்தினார்கள்.
குள்ளநரியிடம் கேட்டார்கள்,
“ என்னாச்சு? ஏன் இப்படி மூச்சு
வாங்க ஓடி வாரே..”
குள்ளநரி எழுந்து, உட்கார்ந்துகொண்டு
சொன்னது.
“ என்ன சொல்றது நண்பர்களே! காலையில்
நண்டைப்பிடிக்க காத்திருந்தபோது பின்னாலே ஒரு சிங்கம் பாய்ந்து பிடித்து விட்டது. என்னைச்
சுத்தப்படுத்தி பொரித்துச் சாப்பிடுவதற்காக இழுத்துக் கொண்டு போனது. அங்கே சிங்கத்தி பெரிய சைனாப்பாத்திரத்தை வைத்து
எண்ணெய் ஊற்றி மசாலா அரைத்து ரெடியாக்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்தபோது நான் சிங்கத்தியிடம்
சொன்னேன்.
“ என்னைக் கடவுள் தான் காட்டுக்கு
ராஜாவாக்கினார்.. சும்மா கடவுளோடு விளையாட வேண்டாம்.. நம்பிக்கை இல்லை என்றால் என்
கூட சும்மா ஒரு உலா வா.. அதைக் காட்டுறேன்..”
சிங்கம் எண்ணெயை கையில் எடுத்துக்
கொண்டு குள்லநரியுடன் நடந்தது. எல்லாவிலங்குகளும் வழியிலிருந்து ஒதுங்கிப் போவதைக்
கண்டது. பறவைகள் பயத்தில் அலறின. எல்லாவற்றையும் சிங்கம் பார்த்தது.
சிங்கத்தைப் பார்த்துத் தான் அவர்கள்
பயந்தார்கள் என்பது முட்டாள் சிங்கத்துக்குப் புரியவில்லை.
கடைசியில் யானையும் அலறிக்கூப்பாடு
போட்டு திரும்பி ஓடுவதைப் பார்த்தது சிங்கம். உடனே அப்படியே நிலத்தில் விழுந்து என்னிடம்
மன்னிப்பு கேட்டது.
நான் என் உயிரைக்கையில் பிடித்துக்
கொண்டு ஓட்டமாக ஓடி வந்து விட்டேன்.
நன்றி - புக் டே
பறயாம் நமுக்கு கதகள்
No comments:
Post a Comment