Friday 25 May 2012

பறவையின் அழுகை

LADY

பகலைக் குடைந்து இரவுக்குள்

ஊர்ந்து வரும் காமப் புழுக்கள்

வெடித்துப் பிளந்த உடலெங்கும்

காமசரிதைகளை எழுதிச் செல்லும்

ஓடிக்கொண்டிருக்கும் நாயின்

உலர்ந்த நாக்கில் ஒட்டிய

பகல்ஞாபகங்களின் மீது

இருள் போர்வையெனப்

போர்த்தும் காமம்

அடைத்த கடையில் அடைக்கலமான

பசித்த இரவின் கண்களில்

சினிமா நடிகையின் திமிர்த்த

முலைகள் குத்த புரண்ட இரவு

தலை சொறிந்து கைகளில்

தீர்க்கும் காமம்

நிசப்த வெளியெங்கும்

பிரவகிக்கும் காமப்பேராறு

கிசுகிசுக்கும் பேரோசை

சற்றே மௌனம் காக்கும்

காமம் தவறிய ஒற்றைப்

பறவையின் அழுகையில்.

6 comments:

  1. இந்த நிலை கடக்காமல் வந்தேன் என்றால் அது மாபெரும் பொய்.நிதர்சனமான உண்மையை மிக சிறப்பாக தந்துள்ளிர்கள்.கோர்வையான எழுத்துக்கள்...மிக அருமை.

    ReplyDelete