மும்பாவின்
தாகம்
உதயசங்கர்
கோடைகாலம்
வந்து விட்டால் அந்தியூர் காட்டில் தண்ணீர் இருக்காது. விலங்குகள் எல்லாம் தண்ணீருக்காக
வெகு தூரம் அலைய வேண்டும். உணவில்லாமல் கூட சில நாள் தாக்குப்பிடிக்கலாம். தண்ணீர்
இல்லாமல் எப்படி இருக்க முடியும். அப்படி மும்பா காட்டுப்பன்றி தண்ணீர் தேடி அலைந்தது.
காட்டின்
நடுவில் ஒரு பெரிய மைதானத்தில் ஒரு குட்டையில் சிறிதளவு தண்ணீர் இருந்தது. அந்தக் குட்டையில்
இருக்கும் திசையைப் பார்த்து நடந்தது.
நடந்தது.
நடந்தது.
நடந்து
கொண்டேயிருந்தது.
மும்பா
காட்டுப்பன்றிக்கு பலகீனமாக இருந்தது. நடக்கமுடியவில்லை. தூரத்தில் புலியின் உறுமல்
கேட்டது. அது பசி உறுமல். புலிக்குப் பசி தாங்க முடியாத போது இப்படித்தான், க்வாவ்..
க்வாவ் என்று கத்தும். மும்பாவுக்குப் பயம். அங்கே ஒளிந்து கொள்ள புதர்ச்செடிகளும்
இல்லை. வெட்டவெளி. கோடைகாலம் ஆனதால் செடிகள் எல்லாம் காய்ந்து விட்டன. இனி மழை பெய்தால்
தான் புதிய இலைதழைகளைப் பார்க்க முடியும்.
இப்போது
மும்பா எச்சரிக்கையாக காதுகளை விடைத்துக் கொண்டு அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டு
நடந்தது.
இதோ அந்த
மைதானம் தெரிகிறது. ஒரு வளைவில் திரும்பியதும் அந்த மைதானம் முழுவதும தெரிந்தது. அதன்
நடுவில் இருந்த ஒரு பள்ளத்தில் கொஞ்சூண்டு தண்ணீர் இருந்தது. சாதாரணமான காலத்தில் அந்த
மைதானம் முழுவதும் நிறைந்து தளும்பிக் கொண்டிருக்கும்.
திடீரென்று
திடுக்கிட்டு நின்று விட்டது மும்பா. பார்த்தால் அந்தப் பள்ளத்தைச் சுற்றி ஒரு பெரிய
கூட்டமே இருந்தது.
புலி,
யானை, புள்ளிமான், கடம்பை மான், மும்பாவின் பெரியப்பா ஜிம்பா, குள்ளநரி, சிறுத்தை,
முள்ளம்பன்றி, முயல், காட்டு மாடு, காகம், மரகதப்புறா, மைனா, காட்டுக்கோழி, மயில்,
சிட்டுக்குருவி, பருந்து, வல்லயம், என்று எல்லாரும் நீர் அருந்திக் கொண்டிருந்தார்கள்.
கொஞ்சம்
கொஞ்சமாக அருகில் போகும்போது தான் தெரிந்தது. ஒரு சத்தமில்லை. புலிக்குப் பக்கத்தில்
புள்ளிமான் நீரரருந்திக் கொண்டிருந்தது. குள்ளநரிக்கு அருகில் முயல் இருந்தது. மும்பாவுக்கு
அருகில் போகலாமா? வேண்டாமா? என்ற தயக்கம் இருந்தது.
ஆனால் தண்ணீரைப் பார்த்ததும் தாகம் அதைப் பள்ளத்தை
நோக்கி கூட்டிக் கொண்டு போனது. எங்கும் இடமில்லை. சுற்றிச் சுற்றி வந்தது. புலிக்கு
அருகில் மட்டும் கொஞ்சம் இடம் இருந்தது. மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து புலிக்கு
அருகில் சென்றது. புலி ஓரக்கண்ணால் மும்பாவைப் பார்த்தது. ஆனால் பேசாமல் தண்ணீர் குடித்தது.
புலி பார்த்ததை மும்பாவும் கவனித்தது. உடல் நடுங்கியது. இப்படியே திரும்பிவிடலாமா?
தண்ணீரை விட உயிர் முக்கியம் இல்லையா? என்று யோசித்தது.
அப்போது புலி தலையைத் தூக்கிப் பார்த்தது. பிறகு
அமைதியாக,
“ வா நண்பா.. தண்ணீரைக் குடி.. பசி வரும் போது மட்டும்
தான் நீ என் உணவு.. பசி இல்லை என்றால் நீயும் நானும் இந்தக் காட்டின் மக்கள், இயற்கையின்
மக்கள் “ என்றது.
அதைக் கேட்ட மும்பா கடைவாயின் இரண்டு பக்கமும் நீண்ட
கோரைப் பற்களைக் காட்டிச் சிரித்தபடி தண்ணீரில் வாயை வைத்து உறிஞ்சியது.
“ பார்த்து நண்பா..! உன் பல் என் முகத்தில் இடிக்கிறது..
என் பல் விழுந்து விடும்.. ஹ்ஹ்ஹா ஹ்ஹாஹா..”
என்று புலி சிரித்தது. மும்பாவும் தண்ணீரைக் குடித்தபடியே
சிரித்தது. புர்ர்ரென தண்ணீர் நாலுபக்கமும் தெறித்தது.
நன்றி - மந்திரத்தொப்பி
வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்
No comments:
Post a Comment