தமிழகமெங்கும் அபரிமிதமான மின் தட்டுப்பாட்டைப் போல டெங்குக் காய்ச்சலும் தினசரி பேசும் பொருளாகி விட்டது. இரண்டுமே அரசு இயந்திரத்தின் கையாலாகாத்தனத்தை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் லாவணி பாடிப் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஊரே தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும்போது அரசியல்வாதிகள் உன்னால தான் தீப்பிடிச்சது..உன்னால தான் தீப்பிடிச்சது..என்று தீயை அணைக்கப் பயன்படுத்த வேண்டிய தண்ணீரை ஒருவருக்கொருவர் விசிறியடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு எதிராக கூர்மை தீட்ட வேண்டிய ஊடகங்களோ மக்களிடம், சிக்கனமாக மின்சாரத்தைச் செலவழிப்பது எப்படி? என்று பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன. அம்பானியிடம் போய்ச் சொல்லவேண்டும் மின்சாரத்தைச் சிக்கனமாக செலவு செய் என்று. அரசு விழாக்களில் மின்சாரத்தைச் சிக்கனமாக செலவு செய்யச் சொல்லவேண்டும். பன்னாட்டுக் கம்பெனிகளிடம் போய்ச் சொல்லவேண்டும் மின்சாரத்தைச் சிக்கனமாகச் செலவு செய் என்று. ஆனால் சாமானியர்களிடம் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவது சுலபமல்லவா? ஏதோ தன் வீட்டில் இருக்கிற ஃபேன், டி.வி., ஃபிரிட்ஜ், நாலைந்து லைட்டுகளால் தான் இந்த மின் தட்டுப்பாடு என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். கூடங்குளம் மின் ஆற்றல் வந்தாலும் அது சாமானியர்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. பன்னாட்டு முதலாளிகளுக்கு எழுதிக் கொடுத்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குத் தான் போய்ச் சேரப் போகிறது. டெங்கு என்ன திடீரெனவா வந்து விட்டது? பொதுச்சுகாதாரம் பற்றிய அரசின் அக்கறையின்மை, கழிவுநீர் வாய்க்கால்கள், ரோடுகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீர், என்று பல காரணங்கள் இருக்கின்றன. நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் டெங்குக் கொசுக்களுக்கு உணவாக யார் மாட்டுகிறார்கள். சாதாரண மக்கள் தானே. அதற்கும் மக்களையே குறை சொல்வது நல்ல தந்திரம். சுகாதாரம் பற்றி மக்கள் அறியாமையிலிருந்தால் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டியது யார் கடமை? இப்படிக் கேள்விகள் ஆயிரம் இருந்தாலும் வந்து விட்ட ஆபத்தை எதிர்கொள்வது எப்படி அது தான் இப்போதைய முதல் கேள்வி.
ஹொமியோபதி மருத்துவத்தில் டெங்கு, சிக்கன் குனியா, எலிக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், என்று எல்லா நோய்களுக்கும் தடுப்பு மருந்துகளும், நோய் குணமாக மருந்துகளும் இருக்கின்றன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? உங்கள் பகுதியில் டெங்குவின் பாதிப்பு இருக்குமானால் கீழ்க்கண்ட மருந்துகளை ஹோமியோபதி மருந்துக் கடைகளில் வாங்கி நீங்களும் சாப்பிடலாம். மற்ற நண்பர்களுக்கும், குடும்பத்தினர்களுக்கும், கொடுக்கலாம். அலோபதி மருந்துகளைப் போல எந்தப் பக்கவிளைவுகளும் கிடையாது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
1. EUPATORIUM PERFOLIATUM – 200 C - 1 DRAM PILLS இந்த மருந்துகளை தினமும் காலை ஒரு மருந்தும் மாலை ஒரு மருந்தும் மூன்று
2. RHUSTOX -200C - 1 DRAM PILLS உருண்டைகளை மூன்று தினங்கள் மட்டும்சாப்பிட டெங்கு வராது.
அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.
Very good info. At right time.
ReplyDeleteஎவ்வாறு சப்பிடுவது..சாப்பிடும் முன்ப அல்லது சாப்பிட்ட பின்பா? நோய் அறிகுறி இருப்பவர்களும் இதை எடுத்து கொள்ளலாமா?
ReplyDeleteதெரியபடுத்தினால் உதவியாக இருக்கும்
நன்றி
பொதுவாக ஹோமியோமருந்துகளை சாப்பிடும் முன் அதாவது குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன் சாப்பிடுவது நல்லது. சில மருந்துகளை சாப்பிட்ட பின் தான் சாப்பிட வேண்டும். மேலே குறிப்பிட்ட மருந்துகளை சாப்பிடும் முன், நோய்த் தடுப்பாகவும், நோய் அறிகுறி இருப்பவர்களும் சாப்பிடலாம்.
DeleteThank a ton sir
ReplyDelete