Saturday 7 July 2012

சிலுவை

உதயசங்கர்death2

 

எத்தனையோ முறை சொல்லியும்

எனக்கான தேநீரில்

எப்போதும் நீங்கள் சர்க்கரையைச் சேர்த்து விடுகிறீர்கள்

மற்றபடி

தயாரிப்புமுறையில் குறையில்லை

சிலவேளைகளில்

பிறவிப்பெருங்கடலை நீந்தி முடித்த

எறும்புகள் சில மிதந்து கொண்டிருக்கலாம்

சிலவேளைகளில் தேயிலையின் துவர்ப்பு கூடி

தொண்டையில் யுத்தம் நடத்தலாம்

சிலவேளைகளில்

தேயிலையின் அடையாளமே

தெரியாமலும் இருக்கலாம்

ஆனால் தோழரே

எத்தனையோ முறை சொல்லியும்

எனக்கான தேநீரில்

எப்போதும் நீங்கள் சர்க்கரையைச் சேர்த்து விடுகிறீர்கள்

உலகத்தை ஒரு சுவை இரண்டாகப் பிரிப்பதை

புரிந்து கொள்ளவில்லை நீங்கள்

சர்க்கரைச்சிலுவையைச் சுமந்துக் கொண்டு

திரிகிறேன் நான்

சிலுவையில் அறையப்படும் நாளை

எதிர்பார்த்து

உயிர்த்தெழும் அதிசயத்தில் நம்பிக்கையில்லை

யாரும் காப்பாற்ற வருவார்களென்று

கனவு காணவும் இல்லை

எனக்குத் தெரிகிறது என்

கல்வாரி மலையுச்சி

என் நாவில் ஒரு துளி மதுரம்.

என் கண்ணில் ஒரு துளி உப்பு.

5 comments:

  1. sarkarai siluvaiyai naanum than sumakiranae.ungalukku mattum eppadi siluvaiyilirunthu kavithai?yungal aelimaaikku vanakkam

    ReplyDelete
  2. "சர்க்கரைச்சிலுவையைச் சுமந்து கொண்டு

    திரிகிறேன் நான்”

    பெரும் வலியை இயல்பாக தருகிறது கவிதை.
    அதை ஏற்றுக் கொள்ளும் மனதின் பக்குவம் போல.

    ReplyDelete