Sunday 10 June 2012

ஒரு சொல்

உதயசங்கர்

ஒரு சொல்

அது வானத்திலும் இல்லைflat,550x550,075,f

பூமியிலும் இல்லை

ஒரு சொல்

அது மழையிலும் இல்லை

வெயிலிலும் இல்லை

ஒரு சொல்

அது பூவிலும் இல்லை

புயலிலும் இல்லை

ஒரு சொல்

அது நீரிலும் இல்லை

நெருப்பிலும் இல்லை

ஒரு சொல்

அது ஆணிலும் இல்லை

பெண்ணிலும் இல்லை

ஒரு சொல்

அது கனவிலும் இல்லை

நனவிலும் இல்லை

எங்கும் இல்லாத ஒரு சொல்

ஊர்ந்தலைகிறது

வாழ்வின் சூதாட்டப்பாதைகளில்

தன் வாலையே விழுங்கிப் பார்த்தபடி

தன் தலையையேத் துப்பிவிட முயற்சித்தபடி.

3 comments:

  1. ஊர்ந்தலைகிற சொற்களின் வீரியங்களும்,வம்பிழுப்பிகளும் முக்கியப்பட்டுப்போனவையாக/

    ReplyDelete
  2. எளிமையான அழகான எழுத்துக்கள். முதன்முதலில் தங்கள் தளம் கண்டேன் இன்று.மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. கவிதையும் படமும் மிக அற்புதமாக உள்ளன மனதுக்குள் ஊர்ந்துகொண்டு

    ReplyDelete