Thursday, 3 July 2025

குழந்தைகளுக்கு நாடோடிக்கதைகளைச் சொல்லலாமா?

 குழந்தைகளுக்கு நாடோடிக்கதைகள், , கிராமியக்கதைகள் சொல்லலாமா? 


 


1. நாட்டார் இலக்கியம் கிராமப்புற மக்களின் வாழ்க்கை குறித்த அருங்காட்சியகம். அவற்றில் முற்போக்கான அம்சங்களும் பழமையான பிற்போக்கான அம்சங்களும் இருக்கும் - என்று இத்தாலிய கம்யூனிஸ்ட் அறிஞர் அந்தோனி கிராம்ஷி சொல்கிறார். 


2. நாட்டார் இலக்கிய வகைமையில் தான் நாடோடிக்கதைகளும் கிராமியக்கதைகளும் இருக்கின்றன. நாடோடிக்கதைகளென்பது நாடோடிகளாக, ஊர், நாடு, எல்லைகளைக் கடந்து செல்லும் நாடோடி மக்கள் எல்லாப்பிரதேசக்கதைகளையும் எல்லாப்பிரதேசங்களுக்கும் கொண்டு செல்வது.


3. கிராமியக்கதைகளென்பது ஒரே பிரதேசத்தில் கூட வட்டாரத்துக்கு வட்டாரம் மாறுபட்டோ, ஒரே மாதிரியோ சொல்லக்கூடியது. 


4.  நாடோடிக்கதைகளும் கிராமியக்கதைகளும் கல்வியோ, எழுத்தோ, இலக்கியமோ, மறுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களிடமிருந்து வாய்மொழியாக உருவானவை.


5.      சாமானியர்களின் வாய்மொழி இலக்கியம் இலக்கியப்பண்டிதர்களின் எந்தப் படைப்புக்கும் குறைவானதில்லை.


6 கல்வியறிவு மறுக்கப்பட்ட பெரும்பான்மையான மக்கள் தங்கள் வாழ்க்கையனுபவங்களிலிருந்தே இந்த மாதிரியான வாய்மொழி இலக்கியத்தை படைக்கிறார்கள்.


7. அந்தக் கதைகளில் ஏமாற்றுதல், ஏமாறுதல், துரோகம், வஞ்சகம், கொலைபாதகம், கொடுமை, பேய், பிசாசு, முனி, மாற்றாந்தாய் கொடுமை, கள்ள உறவு, ஆணாதிக்கம், அரக்கன், அசுரன்,  அரசன், மந்திரி, போன்ற கருப்பொருட்களிலும் கதைகள் இருக்கின்றன.


8. இந்தக் கதைகள் உருவான காலகட்டத்தின் விழுமியங்களைப் பிரதிபலிக்கும்போது அவற்றில் பலது பிற்போக்கானதாகவும், மூடநம்பிக்கைகளைச் சொல்வதாகவும் இருக்கின்றன. அவை சமகாலத்துக்குப் பொருத்தமில்லாதவையாக இருக்கின்றன.


9. அதுமட்டுமல்ல, சில பல கதைகளில் குழந்தைகளும் மையக்கதாபாத்திரங்களாக வருவார்கள். அதனால் இந்தக் கதைகளெல்லாம் குழந்தைகளுக்கானதென்று கருதி விடக்கூடாது. 


10. இந்த மாதிரிக் கதைகளின் கற்பனை வளம், மாயாஜாலம், விலங்குகளைப் பேச வைப்பது, போன்ற சொல்முறை உத்திகள் பெரியவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் குழந்தைக்கதைகளென்ற மயக்கத்தை உருவாக்குகின்றன.


11. கடந்த கால மக்களின் மனநிலையை, வாழ்நிலையைத் தெரிந்து கொள்வது அவசியம். ஆனால் அதற்குரிய வயது வரும்போது தெரிந்து கொள்ளலாம். 


12. அந்தக் கதைகளைப் போன்ற சொல்முறைகளிலும், உத்திகளிலும் புதிய கதைகளை சிறார் எழுத்தாளர்கள் எழுத வேண்டும்.

புதிய குழந்தைகளுக்கேற்ற புதிய கதைகள். 

பழையன கழிதல் வேண்டும்.

No comments:

Post a Comment