Thursday 5 April 2012

விடுதலை

color

விடுதலை


நிறங்களின் பேதத்தைக்


குலைத்து விட்டாள் என் சின்னஞ்சிறுமகள்


சூரியனைக் கருப்பாய் வரைந்தாள்


மலைகளை வெள்ளையாய்


கடலை பழுப்பாய்


அலைகளைச் சிவப்பாய்


அவள் கண்கள் கண்ட வண்ணங்களெல்லாம்


விடுதலைப் பாடல்களிசைத்தன


எல்லா வண்ணங்களையும்


குழப்பியொரு ஒரு கத்திக் கப்பல்


வரைந்து முடித்தாள்


பெருமிதத்தின் சிகரம் ஏறி


கப்பலிலிருந்து ‘டாட்டா’ காட்டினாள்


காற்று வீசியது


கண்மூடித் திறப்பதற்குள்


கப்பல் மறைந்தது


மீண்டும் ஒழுங்குசெய்யப் பட்ட


வண்ணங்கள் அழுது கரைந்தன

அவளை வரச் சொல்லி.


No comments:

Post a Comment