அமைதியானது
ஆழமில்லாதது என் கடல்
ஆழிப்பேரலை அல்ல
ஓடிவிளையாடும் குழந்தையின்
பாதங்களைத் தொட்டுச் சிரிக்கும்
மெல்லலை வீசும் கடல்
கப்பல்கள் வரலாம் படகுகளும்
வல்லங்களும்
ஏன் தூண்டில்காரருக்கும் கூட
வேண்டிய மட்டும் கிடைக்கும் மீன்கள்
காதலர்கள் களிக்க
கவிஞர்கள் கவியெழுத
சும்மாவேனும் காற்று வாங்க
எல்லோரும் வந்தமர
இடமிருக்கிறது என் கடற்கரையில்
நீச்சல் தெரியாதவர்களும்
கடலில் இறங்கலாம்
ஆழம் பெரிதொன்றுமில்லை
அவரவர் முழங்கால் அளவேயாதலால்
தற்கொலை நிகழாக் கடல்
ஆண்கள் பெண்கள் குழந்தைகள் பெரியவர்
கூடிக் குளிக்கும் கடல்
அமைதியானது
ஆழமில்லாதது என் கடல்
வருக யாவரும்
வாழ்வில் ஒருமுறையேனும்
அப்புறம்
அறியும் பாக்கியம் எல்லோருக்கும் இல்லை.
நல்வரவு
ReplyDeleteநன்றி,தேவன்.
ReplyDeleteநன்றி,தேவன்.
ReplyDelete"ஓய்வில்லாத கடல் பேரிரைச்சல் இடுகிறது. எல்லையற்ற வார்த்தைகளின் கடற்கரையில் குழந்தைகள் ஆரவாரத்துடன் சந்திக்கின்றனர்." மகாகவி தாகூரின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன. குழந்தைகளின் ஆரவாரத்துடன் சந்திப்போம். கடல் ஓய்வில்லாமல் அலைபாயட்டும்.
ReplyDeleteவலையுலகம் ஒரு கடல்தான். வரவற்கிறேன் என் இனிய தோழா!
நன்றி மாது! எங்கள் வலையுலக முன்னோடியே உங்களை வணங்குகிறேன்.
Deleteநல்ல கவிதையோடு
ReplyDeleteஆரம்பித்ததற்கு நன்றி
தொடர்ந்து எழுதுங்கள்.
ஒரு வழியாய் வந்து விட்டாய்..தொடர்ந்து எழுது என் இனிய நண்பனே ..ஒரு பெரிய நட்பு வட்டம் உனக்கு காத்திருக்கிறது , உனது படைப்புகளை உள்வாங்க ..
Deleteநாறும்பூநாதன்
நன்றி நண்பா!
Delete