Sunday, 22 June 2025

குழந்தைகளுடன் உரையாடுங்கள்

 குழந்தைகளுடன் உரையாடுங்கள் -2 



1. குழந்தைகளுடன் சேர்ந்து சீரியல்கள் பார்க்காதீர்கள். சீரியல்களில் ஒரு காட்சி கூட குழந்தைகளுக்கானதில்லை.


2. குழந்தைகளை அழைத்துக் கொண்டு ரஜினி கமல் விஜய் அஜித் சூர்யா என்று முன்னணி நாயகர்களின் கொடூரமான வன்முறை படங்களை பார்க்காதீர்கள்


3. குழந்தைகளின் மெல்லு ணர்வுகள் பாதிக்கப்படுவதோடு வன்முறை காட்சிகளை ரசிக்கவும் தொடங்கி விடுவார் கள்.


4. தொலைக்காட்சிகளில் வருகின்ற WWF போன்ற மல்யுத்த படங்களை குழந்தைகளுடன் பார்க்காதீர்கள்.


5. புதையல் எடுப்பதற்காக எதிரிகளை  கொல்வ,து பகைவர்களுடன் சண்டையிடுவது கார் ரேஸ் போன்ற வீடியோ விளையாட்டுகளை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்தாதீர்கள்.


6  வெற்றி பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வெறித்தனத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குழந்தைகளிடம்  வளர்த்து விடும் வாய்ப்பு இருக்கிறது.


7. பள்ளிகளிலும் வீடுகளிலும் திரைப்பட பாடல்களுக்கு குழந்தைகளை ஆட வைக்காதீர்கள் ( குறிப்பாக காதல் பாடல்கள்)


8. குழந்தைகளிடம் திரைப்பட நடிகர்களைப் போல நடிக்கச் சொல்லி வற்புறுத்தாதீர்கள்.


9. உங்கள் அரசியல் ஆன்மீக கருத்துகளை சடங்குகளை குழந்தைகளிடம் திணிக்காதீர்கள்


10.எப்போதும் குழந்தைகளை குற்றம் சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்.


1 comment:

  1. ஒரு பெற்றோராக சரியாக குழந்தைகளை கையாளுகின்றேனா? என பல கேள்விகளுக்கான விடைகள் தங்களின் பதிவின் வழியாக கிடைத்துள்ளது‌
    நான் செயல்படுத்த வேண்டிய தகவல்களும்,செழுமைபடுத்த வேண்டிய நடைமுறைகளையும் அறிந்து கொண்டேன்.

    பகிர்ந்தமைக்கு நன்றி தோழர் 🤝🙏🤝

    ReplyDelete