Monday 6 August 2012

உயிர்ச்சுவை

உதயசங்கர்

149

வெயில் பொழியும் என் முற்றம்

நீருக்காய் வாய் தவிக்கும் தவிட்டுக்குருவி

என் சன்னல் வழி மேகம் வந்து

என்னை எழுப்பியது

நீரும் உணவும் வைத்திருக்கிறேன்

இருக்கின்ற இடத்தை விட்டு

எல்லா இடங்களிலும் தத்தித் தாவுகிறாய்

நிழல் தேடி அலைகிறாய்

பயப்படத் தேவையில்லை

நானும் வேடனில்லை

என் அன்பு ஒரு துளி தான்

ஆனாலும் அது என் அன்பு

வேறு யாருடையதைப் போலுமில்லாத

என் அன்பை ருசித்துப் பார்

என் உயிரின் சுவை தெரியும்.

3 comments:

  1. வாசித்தேன். ஹோம் பேஜ் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  2. அருமையான கவிதை ஐயா !!! உயிர்கள் மீதான அன்பை வெளிக்காட்டியும், மனித மனத்தின் யதார்த்த உணர்வை உணர்த்துகின்ற கவிதை .. !!!

    ReplyDelete
  3. அழகு கவிதை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete