இளையோர் கதை
சின்னஞ் சிறு தியாகி லியூ வென் ஷூவே
தமிழில் – உதயசங்கர்
( உண்மைக்கதை
1959 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி ழீசுவான் புரொவின்ஸ், ஹோஜூவான் கவுண்டி, சுசியா மக்கள் கம்யூனைச் சேர்ந்த இளம் முன்னோடியான லியூ வென் ஷூவே மக்கள் நலனுக்காக ஒரு வர்க்க எதிரிக்கு எதிராக தீரமாகச் சண்டையிட்டுத் தன் உயிரை இழந்தான். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை உயர்த்திப் பிடிக்க தன்னுடைய 14 வயதில் இறந்து போனான்.
பழைய சமூகத்தில் எப்படி நிலப்பிரபுகள் மக்களை அடித்துத் துன்புறுத்துவார்களென்று லியூ வென் ஷூவேக்குத் தெரியும். விடுதலைக்குப் பிறகு ஏழைகள் எழுச்சி பெற்றனர். அவனுடைய வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருந்த து. அவன் தீவிரமாக கட்சியையும் தலைவர் மாவோ வையும், நாட்டையும் சோசலிசத்தையும் நேசித்தான். அவனுடைய நாட்குறிப்பேட்டில்,
” நம்முடைய நாட்டிலுள்ள ஒவ்வொரு குழந்தையும் தலைவர் மாவோவின் நல்ல குழந்தைகளாக இருக்க வேண்டும்..” .
லியூ வென் ஷூவே சீனக்குழந்தைகள் மனதிலும் மக்கள் மனதிலும் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பான்.)
வாங்கின் கூடையிலிருந்த மிளகாயைப் பார்த்து லியூ வென் ஷூவே,
“ நீங்கள் மக்கள் பொருளைத் திருடி விட்டீர்கள்..” என்று சீற்றத்துடன் குற்றம் சாட்டினான்.
நிலப்பிரபு பல்லை இளித்துக் கொண்டே லியூ வென் ஷூவேயின் கையில் கொஞ்சம் பணத்தைத் திணித்தான்.
“ என்னை விட்டு விடு.. பணம் தாரேன்.. நீ போய் மிட்டாய் வாங்கிச் சாப்பிடு..” என்று சொன்னான்.
அந்தச் சிறுவன் பணத்தை நிலப்பிரபுவின் முகத்தில் வீசியெறிந்தான்.
“ அருவருப்பானவனே! நீ எனக்கு லஞ்சம் கொடுக்கப் பார்க்கிறீயா? “
“ நீ கம்யூனின் மிளகாய்களைத் திருடியது மட்டுமல்லாமல் இளம் முன்னோடிக்கு லஞ்சம் கொடுக்கப் பார்க்கிறாய்.. மக்கள் காவல் அலுவலகத்துக்கு வா..” என்று கோபத்துடன் சொல்லியபடியே லியூ வென் ஷூவே நிலப்பிரபுவின் சட்டைக்காலரைப் பிடித்து இழுத்தான்.
7.
“ என் மேலேயிருந்து கையை எடு.. இல்லை.. உன்னை நான் கொன்னுருவேன்..” என்று நிலப்பிரபு மிரட்டினான்.
“ நான் பயப்பட மாட்டேன்.. உன்னை மாதிரி ஒரு கூமுட்டையை நான் விட்டு விடமாட்டேன்..” என்று உறுதியாகச் சொன்னான்.
நிலப்பிரபு உண்மையாகவே லியூ வென் ஷூவேயைக் கொல்வதற்காகப் பிடித்தான். லியூ வென் ஷூவே கத்தினான்,
“ ஓடி வாங்க! வாங் யுங் ஷூவே மிளகாய்களைத் திருடுகிறான்.. “
லியூ வென் ஷூவே அந்த நிலப்பிரபுவோடு தைரியமாகச் சண்டை போட்டான்.
8.
சத்த த்தைக் கேட்டு மக்கள் வயலுக்கு ஓடி வந்தார்கள். ஆனால் அதற்குள் லியூ வென் ஷூவே தன்னுடைய பதினான்காவது வயதிலேயே வீர்த்துடன் போராடித் தன் உயிரை இழந்து விட்டான்.
மக்கள் காவல்படை அந்தக் கொலைகார நிலப்பிரபுவை விரட்டிச் சென்று அன்று இரவே கைது செய்த து. இளம் வீரனைக் கொன்ற குற்றத்துக்காகத் தண்டனை கொடுக்க வேண்டும்.
லியூ வென் ஷூவே மக்கள் நலனுக்காகத் தன்னுடைய உயிரை இழந்தான். மக்கள் நீதி மன்றத்தில் கொலைகாரன் விசாரணை செய்யப்பட்டான். அவனுக்கு மரண தண்டனை விதிக்கபட்ட து.
அந்த இளம் வீரனைப் பற்றிய கதைகள் நாடு எங்கும் பரவியது. அந்தக் கதைகளைக் கேட்ட குழந்தைகள் கட்சியையும் சோசலிசத்தையும் நேசிக்கத் தொடங்கினார்கள். வர்க்க எதிரிகளை முறியடிக்க தீரமிக்க புரட்சிகர உணர்வை வளர்த்துக் கொண்டனர்.
நன்றி – ஃபாரின் லாங்குவேஜஸ் பிரஸ் பீகிங் 1977
புக் டே
.png)
No comments:
Post a Comment