உருப்படியில்லாத ராஜாக்களின் கதைகள்
அண்டாமழை நூல் மதிப்புரை
நூலினி
” உங்க எல்லோருக்கும் புத்தகம் பிடிக்கும் தானே? ‘
“ இது என்ன கேள்வி? நாங்க தான் துளிர் படிக்கிறோமே!
“
“ துளிர் ஒரு மாத இதழ்.. நான் சொல்றது புத்தகம்..”
“ ஓ..நாங்க கதப் புத்தகம் படிப்போமே! ‘
‘ நல்லது.. கதைப்புத்தகம் மட்டுமில்ல.. அறிவியல், வரலாறு இப்படி நிறைய விஷயங்களைப் பத்தி பல
புத்தகங்கள் இருக்கு.. அவற்றையும் நாம் தேடிப் படிக்கணும்..
சரி, படிச்சா மட்டும் போதுமா? படிக்கிற புத்தகம் பத்தி நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கிட்டா இன்னும் நல்லாயிருக்குமில்ல?
“
” கண்டிப்பா..”
“ சரி. அப்போ.. புத்தகங்களுக்குள்ள
ஒரு பயணம் போய்ட்டு வருவோமா?”
“ ம் போலாமே! “
“ இந்த்த்தடவை நான் பயணம் கூட்டிட்டுப் போகப்போறது ’அண்டாமழை’ங்கிற புத்தகத்துக்குள்ள தான். இதை எழுதியவர் உதயசங்கர்.
இது ஒரு கதைப்புத்தகம். இதுல எல்லாமே ராஜாக்களப்
பத்தின கதைகள் தான்.. ஒவ்வொரு ராஜாவும் ஒவ்வொரு விதம்..
ஆனால் எல்லோருக்குமே என்ன ஒற்றுமைன்னா யாருமே உருப்படியா இல்லை...
ஒரு கதைல
வர்ற ராஜா சோம்பேறி.. தூக்க்க்கலக்கத்துல இருக்கும்போது அவர்கிட்ட கோப்புகள்ல கையெழுத்து வாங்கி
மோசடி நடக்குது.. காடு அழிக்கப்படுது.
இன்னொரு
கதைல ராஜா தொலைக்காட்சில வந்து மக்களுக்கு கிலி ஏற்படுத்துறாரு. நாட்டுக்காக மக்களைத் தியாகம்
செய்யச் சொல்றாரு. ஆனால் அவர் மாளிகை மட்டும் ஆடம்பரமாக செல்வச்செழிப்போட
இருக்கு.
அப்புறம்
ஒரு கதைல வர்ற யாருக்குமே பேர் கிடையாது..கைபேசி மாதிரி எல்லோருக்குமே எண்கள்தான் அடையாளம். ஊரோட
எண் 420 ராஜாவோட எண் 421. எண்கள் பதிஞ்ச
அடையாள அட்டை இல்லேன்னா அந்த ஊர்ல எதுவுமே நடக்காது. ஒரு நாள்
ராஜாவே தன்னோட எண்ணைத் தொலைச்சுட்டு தெருவுல திரியறாரு. இப்படி
ஒரு வேடிக்கையான கதை.
வேறோரு
கதைல எதுக்கெடுத்தாலும் வரி,
திடீர்னு மக்கள்கிட்ட இருக்கிற தங்கம், வெள்ளி,
இதெல்லாம் செல்லாதுன்னு ராஜா அறிவிச்சிடுறாரு.. மக்களுக்கு எல்லாம் ஒரே கஷ்டம்.
மற்றொரு
கதைல யாரும் உழைக்கக் கூடாது திருடித்தான் பிழைக்கணும்னு ஒரு சட்டம் போட்டுடறாங்க. இத்தனைக்கும் மக்கள் எல்லோரும்
நல்லா உழைச்சிக்கிட்டிருந்த ஊரு..அது. என்ன
கொடுமைடா இது!
இலவசம்
இலவசம் இலவசம்னு ஒரு கதை. அதுல நிறையப் பொருட்களாஇ அரசே மக்களுக்கு இலவசமா கொடுக்குது. ஆனா ஒரு கைல கொடுத்து இன்னொரு கைல பறிக்கிற கதைதான் இது. காத்தாடிய இலவசமா கொடுத்துட்டு அந்த ஊர்ல காத்துக்கு வரி போட்டுடறாங்க.
சிமிழ்,பந்தி,கலுங்கு,தலையாளம், பன்னடம்,உங்காலி,எராத்தி – இப்படி பல மொழிகள்ல
பேசி ஒத்துமையா வாழ்ந்த ஒரு ஊர்ல ‘ இனிமே எல்லோரும் பந்தி மொழில
தான் பேசணும்னு ஒரு ராஜா சொல்றாரு.. ஏழு மொழிகள்ல பேசிட்டு இருந்தவங்கள
ஒரே மொழி பேச்ச்சொன்னா எப்படி?
இந்தக்
கதைகள்ல வர்ற கதாபாத்திரங்களோட பேர்களையெல்லாம் கேட்டா சிரிப்பு சிரிப்பா வரும். இடி ராஜா, தோலிருக்கச் சுளை முழுங்கி ராஜா, பொன்னுக்கு வீங்கி மந்திரி,
பக்காத்திருடன், முக்காத்திருடன், அரைக்காத்திருடன், குப்புற ராஜா, கலிராஜா, இப்படியெல்லாம் பேர்கள்!
சரி. இப்படி எல்லாக்கதைலயும்
மக்களூக்குப் பிரச்சினைகள்< கஷ்டங்கள்< கொடுக்கிற மாதிரியே இருக்கே. இதுக்கெல்லாம் என்ன தான்
தீர்வுன்னு கேக்கறீங்களா? கதைகளோட முடிவுல தீர்வும் சொல்லப்படுது..
ஒரு கதைல கிளி மூலமா தீர்வு. இன்னொரு கதைல வானவில்,
அப்புறம் உழைப்புதேவதை, இன்னொரு கதைல சிவப்பு,
நீலம், கருப்பு நிறங்கள்ல தேவதைகள் வந்து தப்பு
செய்றவங்க மேலே பொடிகளைத் தூவி விரட்டி அடிக்கிறாங்க.
பிரச்சனைகள்
இருக்கத்தான் செய்யும். அதற்குத் தீர்வு காண்பது தான் மனிதர்களுக்கு அழகு.
என்ன உடனே
இந்தப் புத்த்கத்த வாங்கி படிக்கணும்னு ஆவலா இருக்கா? புத்தகம் பத்தின விவரங்கள்
கீழே இருக்கு. அவசியம் உங்க அம்மா அப்பாகிட்ட சொல்லி வாங்கிப்படிங்க.
அண்டாமழை ( சிறார் கதைகள்
)
ஆசிரியர் – உதயசங்கர்
வெளியீடு – வானம் பதிப்பகம்
சென்னை.
தொடர்புக்கு - 9176549991.
நன்றி - துளிர் நவம்பர் 2019
தோழர் உதயசங்கர் அவர்களின் மாயக்கண்ணாடியும் பல வித்தியாசமான ராஜாக்கள் மூலம் குழந்தைகள் மத்தியில் அரசியலையும் நம் நாட்டின் அவல நிலையையும் எடுத்துக் கூறுவதாக அமைந்திருந்தது.இப்புத்தகமும் அதைப் போலவே குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.
ReplyDeleteதலைவரே ! அசத்துங்க . எனக்கு ஒரு பிரதி அனுப்புங்க
ReplyDelete