Monday, 7 May 2018

கவிதை உறவு இலக்கிய விருது

கவிதை உறவு இலக்கிய விருது

கவிதை உறவு இலக்கிய அமைப்பு 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் வரிசையில் பேய், பிசாசு, இருக்கா? நூலுக்கு முதல் பரிசை வழங்கியிருக்கிறார்கள்.
வெளியீடு - வானம் பதிப்பகம்
தொடர்பு - 9176549991
கேள்வி கேட்பது என்பது மனித இயல்பு. அதனால் தான் அறிவியல் வளர்ந்தது. அறிவியல் மட்டும் அல்ல. வரலாறு, புவியியல், உயிரியல், என்று ஏராளமான துறைகள் உருவாகவும், வளரவும் காரணமாக இருந்தது கேள்விகள் தான். எல்லாவற்றையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்டான் மனிதன். பகுத்தறிவின் விதைகள் இவைதான்.
தாய் மொழி பேசப்படித்தவுடனேயே குழந்தைகள் அது என்ன? இது என்ன? என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்து விடுகின்றன. அந்தக் கேள்விகளுக்கான பதில் புரியாவிட்டாலும் கேட்டுக்கொள்கின்றனர். ஆனாலும் புரியவில்லை என்று பெரிதாகக் கவலைப்படுவதில்லை. கேள்விகள் வெள்ளம் என சீறி வந்து கொண்டே இருக்கின்றன.
பத்து வயதுக்கு மேல் குழந்தைகள் தங்கள் கேள்விகளுக்குப் பதில்களை எதிர்பார்க்கின்றனர். அதுவும் பொறுப்பான பதில்களை எதிர்பார்க்கின்றனர். உண்மையான பதில்களை எதிர்பார்க்கின்றனர். சின்னஞ்சிறு பிராயத்தில் பெரியவர்களால் உண்டான பயம், சந்தேகங்களை விளங்கிக் கொள்ள நினைக்கின்றனர்.
மனிதன் பிறந்தது முதல் இறக்கும்வரை அவனுக்குச் சில சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன.
நாம் வாழும் இந்த உலகம் எப்படி உண்டானது?
கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?
பேய் பிசாசு இருக்கா?
மனிதனுக்கும் இந்த உலகிலுள்ள மற்ற உயிர்களுக்கும் என்ன தொடர்பு?
பல்லி பலன் சொல்லுமா?
பூனை குறுக்கே போனால் போகிற காரியம் கெட்டுப்போகுமா?


இப்படி நிறையக் கேள்விகள் பதில்களைத் தேடிக் கொண்டே இருக்கின்றன. அந்தக் கேள்விகளுக்கான எளிய பதில்களே இந்தக் கட்டுரைகள். இந்தப்பதில்கள் உண்மையில் பதில்கள் இல்லை. ஒரு மாற்று சிந்தனை முறையின் அறிமுகம். அறிவியல்பூர்வமான அணுகுமுறை, பகுத்தறிவின் துவக்கம்.

1 comment: