Friday, 10 April 2026

ஆவி கடவுள் பேய் பிசாசு?

 

ஆவி கடவுள் பேய் பிசாசு?



 

1. ஆதியில் மனிதன் இயற்கையை வழிபட்டான்.

நிலம் நீர் தீ வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்

என்று 4000 ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் இயற்கையை முன்வைத்து பேசுகிறது. இதுதான் தமிழ்மரபு.

2. அறிவியலறிவு வளர்ச்சியடையாத காலத்தில் பஞ்சபூதங்களை வழிபட்டு அவற்றிற்கு படையல் செய்வதின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்தான்.

3. ஆதி இனக்குழு சமூகமும் ஆதி வேளாண் சமூகமும் செடிகள், மரங்கள், விலங்குகள், பறவைகள் என்று எல்லாவற்றிலும் ஆவி குடியிருப்பதாக நம்பியது. எனவே ஒவ்வொரு இனக்குழுவும் தனக்கான செடி, கொடி, மரம், பூ, விலங்கு, பறவை, ஆகியவற்றை புனிதமாகக் கருதி வழிபடுவதின் மூலம் தங்களுடைய இனக்குழுவுக்கு நன்மை கிடைக்குமென்று நம்பினார்கள்.

4. கனவில் வரும் இறந்தவர்கள் எங்கேயோ உயிருடன் இருப்பதாக நம்பினார்கள். அதனால் அந்த உலகத்தில் அவர்கள் நன்றாக வாழ்வதற்காக, நெல், பொன், பொருள் ஆகியவற்றை ஈமத்தாழிகளில் இட்டு புதைத்தார்கள்.

5. இனக்குழுவுக்காக போரிட்டு மடிந்த வீரர்களை நடுகல் வழிபாடு மூலம் தெய்வமாக்கினார்கள். முருகனே நடுகல் வீரன் தான்.

6. உற்பத்தி, மறு உற்பத்தி ஆகியவற்றின் மூலகாரணமான பெண்களைத் தாய்த்தெய்வமென வணங்கினார்கள். எவையெல்லாம் உற்பத்திக்கு காரணமாக இருக்கிறதோ அவற்றையெல்லாம் வளமைத்தெய்வங்களாகப் போற்றினார்கள். நிலம், நீர், இயற்கை, பெண், எல்லோரையும் வணங்கினார்கள்.

7. இனக்குழுவின் இனவிருத்தி, பாதுகாப்பு ஆகியவற்றுக்காக வீரத்தையும், காதலையும் போற்றினார்கள். உதாரணம்- சங்கப்பாடல்கள்.

8. இப்படி உருவான ஆவி வழிபாடே தொன்ம அடையாளங்களின் மூலம் தெய்வங்களாக உருமாறின. நிலவுடமைச்சமூகத்தின் வளர்ச்சியில் தெய்வங்களில் உயர்வு தாழ்வு, பெருந்தெய்வம் நாட்டார் தெய்வம் என்று வர்க்கக்கடவுள்கள் உருவானார்கள்.

9. இந்தத் தெய்வங்களிலும் உழைப்பாளிகளின் , விவசாயிகளின், தெய்வங்களைப் பேய்த்தெய்வங்களாக்கினார்கள். வாசலில் , சுற்றுப்புறங்களில் காவலுக்கும் பணியாளர்களாகவும், அடியாட்களாகவும் மாற்றினார்கள்.

10. எளிய மக்களின் முன்னோர் வழிபாட்டை வைதீகம் வழிப்பறி செய்து பெருந்தெய்வ அவதாரங்களுடன் சேர்த்துக் கதைகட்டினார்கள். முருகன், மதுரைவீரன், காத்தவராயன், கருப்பசாமி, முத்துப்பட்டன், போன்றவர்களைச் சொல்லலாம்.

11. எளிய மக்கள் அகாலமாய், கொலையுண்டோ, நோயுற்றோ, பிரசவத்திலோ இறந்த பெண்களை அம்மன்களாக்கி வழிபட்டனர். அந்த மரணங்களின் தன்மையைப் பொறுத்து அவர்கள் பேய்களாகவோ, பிசாசுகளாகவோ, ரத்தக்காட்டேரிகளாகவோ முனிகளாகவோ, கருப்புகளாகவோ மாற்றப்பட்டனர்.

12. மக்கள் செல்வாக்கு மிக்க பெண்தெய்வங்களை பெருந்தெய்வ பெண்தெய்வங்களுடன் இணைத்தனர்.

13. இப்படியே ஆவி, பேய், பிசாசு, கடவுள் என்று அந்தந்தக் காலத்தில் ஆள்பவர்கள் மக்களைச் சுரண்டும் பண்பாட்டுக் கருவிகளாக  ஆவி, பேய், பிசாசு, கடவுள், ஆகியவற்றை மாற்றுகிறார்கள்.

14. மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் ஆயிரம் இருக்க ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொட்டி ராமர் கோவிலைக் கட்டி குறளிவித்தை காட்டுகிறார்கள்.

15. அறிவியல் மனப்பான்மையும், பகுத்தறிவுப் பார்வையும் குறையக் குறைய மூடநம்பிக்கைகள் பெருகுமென்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.


 

1 comment:

  1. மூடநம்பிக்கைகள் அன்றைய சூழலில் உடல்நல, சமூக, உளவியல், சூழலியல் நன்மைகள் வழங்கின — இது ஆய்வால் நிரூபிக்கப்பட்ட உண்மை.
    2. அவை Pattern Recognition, Survival Advantage, Empirical Observation, Social Control ஆகிய நான்கு காரணங்களினால் உருவாயின.
    3. சீரழிவு இரண்டு வகை: நியாயமான அறிவியல் வளர்ச்சி மற்றும் வேண்டுமென்றே நடத்தப்படும் கலாச்சார அழிப்பு — இரண்டையும் வேறுபடுத்த வேண்டும்.
    4. குறைகூறும் குழுக்கள் 5 வகை: நேர்மையான சீர்திருத்தவாதிகள் முதல் நிறுவன நலன் பேணுவோர் வரை — ஒவ்வொன்றின் நோக்கம் வேறுவேறு.
    5. Social Identity Theory, Group Polarization, Outrage Economy ஆகிய உளவியல் சக்திகள் விமர்சன குழுக்களை தீவிரமாக்குகின்றன.
    6. 'புரிந்துகொள் → பிரி → மாற்று வழங்கு' என்ற 3-நிலை கட்டமைப்பு மட்டுமே உண்மையான முன்னேற்றம் தரும்.
    7. கலாச்சார Intangible Heritage ஐ அழிப்பது அல்ல; அதை நவீன அறிவியல் அறிவோடு இணைத்து புதுப்பிப்பது தமிழ் சமூகத்தின் எதிர்காலப் பாதை
    கோவில்பட்டி
    கோ.சுரேஷ்குமார்.

    ReplyDelete