Tuesday, 25 November 2025

வெட்டுக்கிளியும் விடியலின் ராணியும்

 

 

1.                                                                     வெட்டுக்கிளியும் விடியலின் ராணியும்

மைலையாளத்தில் - வீணாதேவி மீனாட்சி

     தமிழில்- உதயசங்கர்




 

விடியலின் ராணியின் பெயர் அரோரா. அழகியான அந்த ராணியை அழகனான ஒரு இளைஞன் விரும்பினான். அவனுடைய பெயர் டித்தோனஸ். தினமும் அதிகாலையில் கிழக்கு திசையிலிருந்து, செந்நிற நீல நிறத்தில் திரையை விலக்கி அரோரா வெளிப்படுவாள். அந்த முகத்தைப் பார்த்து காலைவாழ்த்துப் பாடி மகிழ்வதற்காய் டித்தோனஸ் காத்திருக்கும். அதற்காகவே பச்சைப்பட்டுப் போன்ற புற்களின் மீது தன்னுடைய வீட்டைக் கட்டிக் கொண்டான் டித்தோனஸ்.

அவர்கள் இருவருவும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தனர். ஒரு நாள் அதிகாலையில் அரோரா வந்து பார்க்கும்போது டித்தோனஸைக் காணவில்லை. கவலையுடன் சுற்றுமுற்றும் தேடிப் பார்த்தபோது தூரத்தில் ஓரிட த்தில் மண்ணில் கிடந்த வெளிறிய உடலைப் பார்த்தாள்.

அரோரா பூமிக்குப் பாய்ந்து சென்றாள். இறந்து கொண்டிருந்த டித்தோனஸின் உடலைக் கைகளில் அள்ளியெடுத்து கடவுளரின் தலைவரான ஸூஸிடம் சென்றாள்.

டித்தோனஸ் இறக்கக்கூடாது..”

என்று அரோரா இறைஞ்சியது. ஆனால் இதற்கிடையில் ஒரு தவறு நடந்து விட்டது. டித்தோனஸ் எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டும் என்று கேட்பதற்கு அரோரா மறந்து விட்டாள்.. அதனால் என்ன நடந்தது தெரியுமோ?

சட்டென டித்தோனஸ் மூப்பும் பலகீனமுள்ளவனாகவும் ஆகிவிட்டான். டித்தோனஸிக்கும் மிகுந்த வேதனை உண்டானது.

எனக்கு புல்வெளியில் இருந்தால் போதும்..அங்கே நான் மகிழ்ச்சியாக இருப்பேன்..”

என்று பலகீனமான குரலில் வேண்டுகோள் வைத்தான்..

சரி அப்படியே ஆகட்டும் அன்பனே! உன்னுடைய மகிழ்ச்சியைத் தான் நான் விரும்புகிறேன்..” என்று அரோரா சொன்னது. பிறகு அரோரா டித்தோனஸிடம்,

என்னுடைய அன்புக்குரிய டித்தோனஸ்! உனக்கு எல்லாத்துன்பங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கட்டும். இனிமேல் வெட்டுக்கிளியாக புல்வெளிகளில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரட்டும். அதற்காக நான் ஒரு அழகான ஆடையைத் தருகிறேன்.. பூமியில் இதுவரை யாருக்கும் கொடுத்திராத ஆடை.”

என்று சொன்னது.

அந்த ஆடை இளம்புல்லின் நிறத்திலிருந்த து. புல்வெளியில் குதித்துப் போகும்போது யாராலும் அவனை அடையாளம் காணமுடியாது.

இப்படித்தான் வெட்டுக்கிளிகள் உருவாயின. புல்வெளியில் விளையாடப் போகும் சேக்காளிகளே வெட்டுக்கிளிகளைப் பார்க்கும் போது இந்தக் கதையைச் சொல்லுங்கள்.

நன்றி - புக் டே

No comments:

Post a Comment