Friday, 21 November 2025

சாலமன் அரசனும் தேனீயும்

 

1.    சாலமன் அரசனும் தேனீயும்

மலையாளத்தில் - வீணாதேவி மீனாட்சி

தமிழில் - உதயசங்கர்




 

சாலமன் அரசன் மிகச் சிறந்த அறிவாளி என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் யாருக்கும் தெரியாத கதை ஒன்று இருக்கிறது. அதைத் தான் இப்போது சொல்லப்போகிறேன்.

முன்னொரு காலத்தில் கிழக்குத் தேசத்தை சாலமன் என்று மிகச் சிறந்த அரசன் ஆட்சி செய்தான். சாலமனுக்குத் தெரியாத து எதுவுமில்லை. அவருக்குத் தெரியாத விஷயங்களே இல்லை. அவர் பதில் சொல்ல முடியாத கேள்விகள் கேட்பதற்கு ஆட்களில்லை. இப்படி உலகமெங்கும் அவருடைய புகழ் பரவியிருந்த து. ஆனாலும் அவருடைய புத்திசாலித்தனத்தைப் பரீட்சை செய்து பார்க்க அறிவாளிகள் நான்கு திசைகளிலிருந்தும் வருவது வழக்கம். அவர்கள் யாராலும் அரசனை திணறவைக்கிற ஒரு கேள்வி கூட கேட்க முடியவில்லை.

இன்னும் ஒரு விஷயமும் உண்டு. சாலமன் அரசனுக்கு எல்லா மரங்களும் செடிகளும் தெரியும். அதுமட்டுமல்ல. மனிதர்களின் மொழி தெரிவதைப் போல விலங்குகள் பறவைகள், பூச்சிகள் இவற்றின் மொழியும் தெரியும். அவை பேசுவது புரியும்.

 

அரசனின் அறிவின் புகழ் உலகம் எங்கும் பரவியது. தெற்கு தேசத்தை ஆண்ட ஷேம்பா அரசிக்கும் இந்த அதிசயமான செய்தி சென்றடைந்த து. அவர் அதைக் கேட்ட பிறகு,

அப்படிப்பட்ட அறிவாளியை நான் நேரில் பரிசோதி த்துப் பார்க்கீறேன்..”

என்று நினைத்தார்.

அரசி, ஒரு சிறந்த கலைஞரை வரவழைத்தார். அரண்மனை பூந்தோட்ட த்திலிருந்து பறித்த மணமிக்க முல்லைப்பூக்களினால் ஒரு பூச்செண்டை அவரே கட்டினார். அதே போல அச்சு அசலாக செயற்கையாக ஒரு பூச்செண்டினைச் செய்யச் சொன்னார். இரண்டு செண்டுகளிலும் பூக்களோ, மொட்டுகளோ, இலைகளோ எல்லாம் அச்சு அசல் அப்படியே ஒன்றுபோல இருந்தன.

இந்த இரண்டு பூச்செண்டுகளையும் சாலமன் அரசனின் முன்னால் கொண்டு போய் வைத்தார் ஷேம்பா அரசி.

மகாராஜா! இந்த இரண்டு பூச்செண்டுகளில் எது உண்மையான பூச்செண்டு என்று உங்களால் சொல்ல முடியுமா? “

என்று கேட்டார்.

சாலமன் ஒரு நிமிடம் யோசித்தான். அந்த நேரத்தில் சன்னலுக்கு வெளியே ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று சத்த த்துடன் பறந்து சன்னலில் முட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

ஆகா! எனக்கு உதவி செய்ய என்னுடைய நண்பன் வந்து விட்டான்.. யார அங்கே? சன்னலைத் திறந்து விடுங்கள்..”

என்று உத்தரவிட்டான்.

அதைக் கேட்ட ஷேம்பா ராணி அரசனை வணங்கி,

தாங்கள் மிகச்சிறந்த அறிவாளியும் விவேகியும் என்று நான் தெரிந்து கொண்டேன்.. இந்தப் பாட த்தைக் கற்றுக் கொடுத்ததுக்கு மிக்க நன்றி மகாராஜா! “

பிரியமுள்ள சேக்காளிகளே! உங்களுக்குப் புரிந்ததா

ஷேம்பா ராணி ஏன் அப்படிச் சொன்னாள் என்று. யோசித்துப் பாருங்கள்!

சரியாக பதில் சொல்பவர்களுக்குப் பரிசு உண்டு.

நன்றி = புக் டே

 

No comments:

Post a Comment