Tuesday, 19 August 2025

இந்திய நாடோடிக்கதை 7 முட்டாள் சாச்சுலியின் கதை

 

இந்திய நாடோடிக்கதை 7

முட்டாள் சாச்சுலியின் கதை

தமிழில்உதயசங்கர்



முன்பு ஒரு காலத்தில் கங்குனி என்ற ஏழை விதவைப்பெண்ணுக்கு ஒரு முட்டாள் மகன் இருந்தான். அவனுடைய பெயர் சாச்சுலி. கங்குனி ஒவ்வொரு நாளும் பிச்சை எடுத்துத் தான் வாழ்க்கை நட த்தினாள். வளர்ந்த பிறகு சாச்சுலி ஒரு நாள் அம்மாவிடம் கேட்டான்,

என்ன செய்தால் பெண்கள் சிரிப்பார்கள்? “ என்று கேட்டான். அவள் விளையாட்டாக,

ஒரு சிறிய கல்லை அவர்கள் மீது எறிந்து பார்.. அவர்கள் சிரிப்பார்கள்..” என்றாள். சாச்சுலி அந்த ஊரில் இருந்த கிணற்றடியில் போய் உட்கார்ந்தான். அப்போது மூன்று பெண்கள் தண்ணீர் எடுப்பதற்காக குடங்களுடன் வந்தார்கள். அதைப் பார்த்த சாச்சுலி,

இந்த மூன்று பெண்களில் ஒருத்தியை நான் சிரிக்க வைப்பேன்..’ என்று நினைத்தான். இரண்டு பெண்கள் குடங்களில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு அவரவர் வீட்டை நோக்கிப் போய் விட்டனர். அவர்கள் மீது சாச்சுலி கல்லெறியவில்லை. நிறைய நகைகள் அணிந்த மூன்றாவது பெண் அவனைக் கடந்து போகும்போது ஒரு பெரிய கல்லைத் தூக்கி அவள் மீது எறிந்தான். அவள் கீழே விழுந்து இறந்து விட்டாள். அப்போது அவளுடைய வாய் லேசாக் கோணியிருந்த து. அதைப் பார்க்கும்போது அவள் சிரிப்பதைப் போல இருந்தது.

பாரு..பாரு.. அவள் எப்படிச் சிரிக்கிறாள்? “ என்று கத்திக் கொண்டே அம்மாவை அழைத்து வர ஓடினான் சாச்சுலி.

அம்மா அம்மா இங்கே வந்து பாரு.. இந்தப் பெண்ணை நான் எப்படிச் சிரிக்க வைத்தேன் என்று பாரு..”

என்று சொன்னான். அவனுடைய அம்மா வந்து இறந்து போயிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தாள். இறந்த பெண் ஒரு பெரிய பணக்காரக்குடும்பத்தைச் சேர்ந்தவள், அவள் அணிந்திருந்த நகைகள் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளவை. கங்குனி இறந்த பெண்ணின் நகைகளை எல்லாம் கழட்டிக் கொண்டாள். அவளுடைய உடலை கிணற்றுக்குள் போட்டு விட்டாள்.

சிலநாட்கள் கழித்து இறந்த பெண்ணின் அம்மா அப்பா மற்றும் உறவினர்கள் பறையடித்துச் செய்தி சொல்பவரிடம் சொல்லித் தேடச் சொன்னார்கள்.

ஏராளமான தங்க நெக்லேஸுகளும், தங்க வளையல்களுடன் காணாமல் போன அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து கொண்டு வருபவர்களுக்கு பெரிய சன்மானம் கொடுக்கப்படும்..”

என்று பறையடித்துச் சொன்னார். அதைச் சாச்சுலி கேட்டான்.

அவள் எங்கிருக்கிறாள் என்று எனக்குத் தெரியும். என்னுடைய அம்மா அவளுடைய நகையை எல்லாம் எடுத்துக் கொண்டு அவளைக் கிணற்றில் வீசி விட்டாள்..”

என்றான் சாச்சுலி. பறையடிப்பவர்,

நீ கிணற்றில் இறங்கி அவளை மேலே கொண்டு வர முடியுமா? “ என்று கேட்டார்..

நீ ஒரு கயிறை என்னுடைய இடுப்பில் கட்டி கிணற்றில் இறக்கினால் நான் அவளைத் தூக்கிக் கொண்டு வருகிறேன்..” என்றான் சாச்சுலி.

உடனே எல்லாரும் கிணற்றை நோக்கி நடந்தனர். கங்குனியின் வீட்டுக்கு அருகில் தான் கிணறு இருந்தது. தூரத்தில் அவர்கள் வருவதைப் பார்த்த தும், எதற்காக வருகிறார்கள் என்று அவளுக்குப் புரிந்து விட்டது. உடனே வேகமாக ஓடிச் சென்று ஒரு ஆட்டைக் கொன்று கிணற்றுக்குள் போட்டு விட்டு கிணற்றில் போட்ட அந்தப் பெண்ணின் பிணத்தை எடுத்து ஒளித்து வைத்து விட்டாள்.

பறையடிப்பவர் சில மனிதர்களை அழைத்துக் கொண்டு வந்தார். அவர்கள் சாச்சுலியை கிணற்றுக்குள் இறக்கினார்கள். உள்ளே மூழ்கி எழுந்த சாச்சுலி,

அவளுக்குக் கண்கள் உண்டா? “ என்று கேட்டான். மேலே இருந்த மனிதர்கள்,

இது என்ன கேள்வி? எல்லோருக்கும் தான் கண்கள் இருக்கும்..” என்றார்கள்.

அவளுக்கு மூக்கு உண்டா? “ என்று கேட்டான் சாச்சுலி.

ஆமாம்.. அவளுக்கு மூக்கு உண்டு..” என்றார்கள்.

அவளுக்கு வாய் இருக்குமா? “ என்று கேட்டான் சாச்சுலி.

ஆமாம்.. “ என்றார்கள்.

அவளுடைய முகம் நீளமாக இருக்குமா? “

அதைக் கேட்ட தும் குழம்பிப்போனார்கள்.

என்ன சொல்றான் இவன்? யாருக்கும் முகம் நீளமாக இருக்காது.. அவள் முகம் நீளமாக இருக்குமோ? ஆமாம்.. அவளுக்கு நீளமான முகம் இருக்கும்..”

என்று கத்தினார்கள்.

அவளுக்கு வால் உண்டா? “

யாருக்குமே வால் இருக்காதே.. ஆனால் அவளுக்கு நீண்ட தலைமுடி உண்டு.. சந்தேகமில்லை.. அதைத்தான் அவன் வால் என்று சொல்கிறான் போல.. ஆமாம் ஆமாம் அவளுக்கு வால் உண்டுஎன்று கத்தினார்கள்.

அவளுக்குக் காதுகள் உண்டா? “

காதுகள் எல்லாருக்கும் உண்டு..”

நாலு கால்கள் உண்டா? “

நாலு கால்களா? நாலு கால்கள் யாருக்குமே கிடையாது.. ஒருவேளை அவளுடைய கைகளைக் கால்கள் என்று சொல்கிறாயோ, அப்படியென்றால் அவளுக்கு நான்கு கால்கள் உண்டுசீக்கிரம் அவளை மேலே கொண்டு வா…”

சாச்சுலி ஆட்டின் பிணத்தைத் தூக்கிக் கொண்டு மேலே வந்தான்.

மேலே இருந்த அந்தப் பெண்ணின் உறவினர்களுக்கு ஆட்டின் பிணத்தைப் பார்த்த தும் பயங்கரக் கோபம் வந்து விட்ட து.

அவர்கள் சாச்சுலியை நன்றாக அடித்து உதைத்தார்கள்.

அடி முட்டாள்.. பொய்யன்என்று திட்டிவிட்டு போனார்கள்.

சாச்சுலி அவர்கள் அவனைப் புகழ்ந்து விட்டுப் போவதாக நினைத்து

நன்றி நன்றி நன்றிஎன்று இளித்துக் கொண்டு நின்றான்.

 

( சாச்சுலி தொடர்ந்து வருவான் )

நன்றி -- Bookday.in

No comments:

Post a Comment