Showing posts with label worldbookday. Show all posts
Showing posts with label worldbookday. Show all posts

Sunday, 19 April 2026

வாசிப்பு என்ன செய்யும்? -

 

உலகபுத்தக தினம் 2026


வாசிப்பு என்ன செய்யும்?



 

1. வாசிக்கும்போது உங்கள் அறிவு விசாலமடையும்.

 

2. வாசிக்கும்போது உங்கள் மனம் அன்பில் திளைக்கும்.

 

3. வாசிக்கும்போது நீங்கள் அறியாத பல விஷயங்களை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்

 

4. வாசிக்கும்போது உங்களுக்கு புரியாத பல விஷயங்களை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

 

5. வாசிக்கும் போது எது வரலாறு? எது கட்டுக்கதை? என்பது தெரிந்துவிடும்.

 

6. வாசிக்கும்போது எது பண்பாடு? எது மரபு? எது சனாதனம்? என்று புரிந்துவிடும்.

 

7. வாசிக்கும் போது உலகத்தில் உள்ள அத்துணை மனிதர்களும் நம்முடைய சகோதரர்கள் என்று நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

 

8. வாசிக்கும் போது சாதி மதம் இனம் மொழி போன்ற பேதங்களை நான் எளிதில் கடந்து விட முடியும்.

 

9. வாசிக்கும்போது இந்த உலகின் அத்தனை கண்டங்களிலும் உள்ள வெவ்வேறு மொழி பேசக்கூடிய வெவ்வேறு இனத்தைச் சார்ந்த மக்களின் வாழ்க்கையை நாம் அனுபவிக்க முடியும்.

 

10. வாசிக்கும்போது மனித உறவுகளின் காம குரோத நேச பாவனைகளை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

 

11. எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எந்த தேசத்தை சேர்ந்தவராக இருந்தாலும் மனிதர்களுடைய உணர்வு நிலைகளில் உள்ள ஒற்றுமையை நாம் உணர முடியும்.

 

12. வாசிக்கும்போது இந்த பிரபஞ்சம் இந்த எப்படி தோன்றியது? எப்படி இயங்குகிறது? என்று புரிந்து கொள்ள முடியும்.

 

13. வாசிக்கும் போது பிரபஞ்சத்திற்கு அப்பால் உள்ள பால்வெளி மண்டலம், சந்திர சூரியர்கள் கோள்கள் என்று நாம் அறிந்து கொள்ளும் போது  இந்த வாழ்வின் முக்கியத்துவம் என்ன என்று நாம் உணர முடியும்.

 

14. . மானுட வாழ்வின் மகத்துவத்தை நாம் புரிந்து கொள்ளும்போது நம்மிடம் உள்ள அற்பமான சுயநலம்,சுரண்டல், பொறாமை, குரூரம், குரோதம், விரோதம், பகை , பாகுபாடு போன்ற உணர்வுகளை கடந்து அனைத்து உயிர்களின் மீதும் அன்பு செலுத்தும் பேருவகை நிலையை நாம் அடைந்து விட முடியும்.

 

15. வாசிக்கும்போது இந்தப் பிரபஞ்சத்தையே ஆரத்தழுவி அன்பு செய்யும் மனதைப் பெறமுடியும்.