Saturday, 20 June 2026

பூங்கா நண்பர்கள்

 

பூங்கா நண்பர்கள்

உதயசங்கர்




ஸ்ஸ்ஸ்ஸ்.. காது கேட்கிறதா? “

என்று ஒரு சத்தம் கேட்ட து. வானத்திலிருந்து ஸ்மைலி நிலா எட்டிப் பார்த்த து. தூரத்திலிருந்த நட்சத்திரம் கூட காதுகளைக் கூர்மையாக்கியது. பூங்காவில் ஆழ்ந்த உறக்கத்தில் கார்பன் டை ஆக்ஸைடை குறட்டையாக விட்டுக்கொண்டிருந்த செடிகள் லேசாய் அசைந்து கொடுத்தன. அந்தச் செடிகளில் ஒட்டிக் கொண்டிருந்த பூச்சிகள்யார் அது? யார் அது? கீச் கீச்என்று சத்தமிட்டன. ஒரு ஓரமாய்ப் போய்க் கொண்டிருந்த சாரைப்பாம்பு வாயில் கௌவிய தவளையுடன் ஒரு கணம் நின்று சுற்றிலும் பார்த்த து.

பகல்ல தான் மனிதர்கள் தொந்திரவு என்றால் இரவிலும் வந்து இப்படிச் செய்கிறார்களே..” என்று நினைத்துக் கொண்டே வேகவேகமாக ஊர்ந்து சென்றது. அப்போதும் கூட அருகில் கிடந்த சிமெண்ட பெஞ்சு அசையவில்லை. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த து.

மறுபடியும்ஸ்ஸ்ஸ்ஸ்.. ஏய் என்ன இப்படித் தூங்கறே? “ என்றது முதலில் கூப்பிட்ட கிரானைட் பெஞ்சு. அது நகரத்தின் நடுவில் இருந்த பூங்கா. நள்ளிரவு நேரம். அப்போது தான் பூங்காவில் இருக்கும் பெஞ்சுகள், மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள், புழுக்கள், பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள், பட்டாம்பூச்சிகள், வண்டுகள், எலிகள், தவளைகள், குருவிகள், மைனாக்கள், காகங்கள், நாய்கள், பூனைகள், மரங்களின் கிளைகளில் தங்கி ஓய்வெடுக்கும் காற்று, பூங்காவின் காவல்காரர் மணி அண்ணன் எல்லாரும் தூங்குகிற நேரம். அந்த நேரத்தில் இந்தச் சத்தம் எல்லோரையும் உசுப்பிவிட்ட து.

ஆனால் கிராணைட் பெஞ்சின் நண்பனான சிமெண்ட பெஞ்சு கண்விழிக்கவில்லை. காற்றுக்குப் பொறுக்கவில்லை. மரங்களிலிருந்து குளிரை அள்ளிக் கொண்டு அப்படியே சிமிண்ட் பெஞ்சின் மீது போய் மோதியது.

எப்பா எந்திரிப்பா? உன் பிரண்ட் கூப்பிட்டுக்கிட்டே இருக்கான்..” என்று ஊளையிட்ட து. சிமெண்ட் பெஞ்சு குளிரில் நடுங்கிய படியே,

ஸ்ஸ்ஸ் யப்பா என்ன குளிரு.. “ என்று நடுங்கிக் கொண்டே கண்களைத் திறந்த து. எதிரில் கிரானைட் பெஞ்சு கோபமாய் பார்த்துக் கொண்டிருந்த து. உடனே,

ஹிஹ்ஹி கொஞ்சம் அசந்துட்டேன்.. வயசாயிடுச்சில்ல..” என்று இளித்த து. உடனே கிரானைட் பெஞ்சு,

....ன்னா வயசாயிடுச்சுன்னு சொல்லிருவியே.. இன்னிக்குக் கூட இரண்டு பெரியவர்கள் பேசும்போது,

கேட்டியா சம்முகம்.. எம்பேரன்..ஒண்ணாங்கிளாஸ் படிக்கான்.. இப்ப தினமும் கேக்க ஆரம்பிச்சுட்டான்..தாத்தா நீ எப்ப செத்துப்போவே? எப்ப செத்துப் போவே?ன்னு நான் கேட்டேன்.. ஏண்டா செல்லம் கேக்கிறே? இல்லை ரோஷனுடைய தாத்தா செத்துப் போனதுக்குக் கூட்டமாய்க்கூடி பட்டாசு போட்டாங்களாம்.. பழம் காசு.. எல்லாம் தூக்கி வீசுனாங்களாம்.. அப்படிங்கிறான்..“ என்று சிரித்தபடியே சொன்னார்.

சம்முகம் சிரித்தார்.

டேய் சோமு.. குழந்தைகளுக்கு வயசானா செத்துப் போவாங்கன்னு தெரிஞ்சிருக்கில்ல.. அது தான் முக்கியம்.. அவர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கணும்.. மற்றபடி அர்த்தம் தெரிஞ்சு கேட்டிருக்க மாட்டான்..”

என்று சம்முகம் சொல்லி முடித்த தும் இரண்டுபேரும் அமைதியாகிவிட்டனர் பேசவேயில்லை. அப்படியே கொஞ்ச நேரத்தில் எழுந்து போய் விட்டனர். “

என்று சொல்லியது. அதைக் கேட்ட சிமெண்ட் பெஞ்சு கொஞ்சநேரம் பேசவில்லை.

என்ன தூங்கிட்டியா கிழவா? “ என்று கிசுகிசுத்த து கிரானைட் பெஞ்சு. பெரிய பெருமூச்சுடன் சிமெண்ட் பெஞ்சு,

இல்லைப்பா.. எனக்குக் கூட த்தான் வயசாயிருச்சு.. ஒரு கால்ல பாதி அரித்து விட்ட து.. உடலில் இருந்த பளபளப்பு போய்விட்ட து. வெயிட்டாய் நாலுபேர் உட்கார்ந்தால் நானும் அப்படியே உட்கார்ந்துருவேன்.. ஆனால் இன்னிக்கிப் பாருமத்தியானநேரம்.. கொஞ்சம் புழுக்கமாகத் தான் இருந்த து. வேர்க்க விறுவிறுக்க ஒரு பள்ளிக்கூடப்பையன் வந்து என்மீது உட்கார்ந்தான்.. வந்த திலிருந்தெ ஒரு நிலையில் இல்லை.. பள்ளிப்பையைத் திறப்பான் மூடுவான்.. திறப்பான் மூடுவான்.. முகமே இருண்டு போயிருந்த து. கிராமத்துப்பையன் போலிருந்தான். ஒருவேளை கிராமத்துப்பள்ளிக்கூட த்தில் படிக்கிறானோ என்னவோ? எப்போதும் அழப்போகிறவனைப் போல இருந்தான்.. அவனுடைய வாய் எதையோ முணுமுணுத்துக் கொண்டே இருந்த து. முன்பு மாதிரி காது சரியாக் கேட்பதில்லையா? என்ன சொல்கிறான் என்று புரியவில்லை. உற்றுக் கேட்டேன். பகீரென்றது. ‘ நான் இருக்க க்கூடாது.. செத்துப்போயிரணும்..’ என்று திரும்பச் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். எப்படியிருக்கும் எனக்கு? சின்னப்பையனுக்கு இப்படி ஒரு எண்ணம் வரணும் என்றால் எவ்வளவு கொடூரம் நடந்திருக்க வேண்டும்? என்று யோசித்தேன்.. அந்தச் சின்ன ஞ்சிறுசிடம் என்ன நடந்த து என்று கேட்கநினைத்தேன்.. ஒருவேளை தன் துயரத்தை வெளியில் சொன்னாலாவது வேதனை குறையுமல்லவா? சாகவேண்டிய வயதா? சாக நினைக்கலாமா? எனக்குப் பதட்டமாகிவிட்ட து. எப்படிக்கேட்பது? என்று தெரியவில்லை.

காற்று அண்ணாச்சி அழைத்தேன். அண்ணாச்சி தான் எப்போதும் எல்லா இடங்களிலும் இருப்பாரே.. உடனே காற்று அண்ணாச்சி குளிர்ந்த காற்றை அள்ளிக் கொண்டுவந்து அப்படியே அந்தப் பையன் மீது வீசினார். குளிர்ந்த காற்று பட்ட தும் அவன் முகத்திலிருந்த வெப்பம் தணிந்த து. என் மீதும் காற்றுப்பட்ட தால் நானும் அவனைக் குளிர்வித்தேன்.. அவன் முகம் கொஞ்சம் சாந்தமானது.. நான் அவனிடம் மானசீகமாக, ‘ பேசு தம்பி பேசு.. “ பேசினால் எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைக்கும்.. என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.. நான் பேசியது கேட்ட தோ இல்லை காற்று அண்ணாச்சியினால் அவனுடைய மனக்கொதிப்பு குறைந்த தோ தெரியாது.. அவன் பேசத் தொடங்கினான்.

என்னை மட்டும் ஏன் சார் இப்படிச் செய்யச் சொல்லணும்? நல்லாப்படிக்கிறேன்.. பள்ளிக்கூட த்தில் ஒழுங்காக இருக்கிறேன்..சரி படிக்காவிட்டாலும் தான் என்ன? இப்படிச் செய்யச் சொல்லணுமா? வேறு பையன்களை ஏன் சொல்ல லை? முதலில் வகுப்பில் இருக்கும் தண்ணீர்ப்பானையில் தண்ணீர் குடிக்க க்கூடாது.. தனியாத்தண்ணீர் கொண்டு வரணும் என்று சொன்னார். சரி என்று கொண்டு வந்தேன்.. பிறகு மற்ற பையன்களை விட்டுக் கொஞ்சம் தள்ளி உட்காரவேண்டும் என்று சொன்னார்.. உட்கார்ந்துகிட்டேன்.. என்னிடம் மற்ற பையன்கள் யாரும் அப்படி வித்தியாசமாய் நடக்கவில்லை. என்னிடம் பேசுவார்கள்.. கணக்கு நோட்டை வாங்கிக் கணக்கைப் போடுவார்கள்.. படம் வரையச் சொல்வார்கள். ஆனால் ஒரு சில பையன்கள் எனக்கு அருகில் கூட வரமாட்டார்கள்.. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை..

ஆனால் சார் இப்படிச் சொல்வார் என்று நினைக்கவில்லை. மூன்று நாட்களாய் என்னை க்கூஸ் கழுவச் சொல்கிறார்அதுவும் எப்படி? டேய் கிட்ணன் மகன் தானே உனக்கு அதெல்லாம் பழக்கமா இருக்கும்.. போ.. போய் கழுவிட்டு வா.. என்கிறார். இவர்கள் மனதில் எவ்வளவு குப்பை இருந்தால் இப்படிச் சொல்ல முடியும்? அப்பா துப்புரவுத்தொழிலாளி என்பதால் நானும் அந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்ற நினைப்பு எப்படி வருகிறது?

முதலில் முடியாது என்றேன்.. எனக்குப் பழக்கமில்லை சார்.. என்று பணிவாகத் தான் சொன்னேன்.. அதைக் கேட்ட தும் நான் பதில் பேசிவிட்டேன்.. மறுத்துவிட்டேன் என்று கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்ட து. என்னை அடிக்கிறார்? என்னுடைய அப்பாவோ அம்மாவோ கூட அடித்த தில்லை.. ஒரு குழந்தையை அடிக்கிறோமே என்ற உணர்வு இல்லை.. இவர்கள் எல்லாம் மனிதர்களா? என்று தெரியவில்லை. வலி தாங்காமல் நான் போய் கழுவினேன். ஆனால் இனி முடியாது.. யாரிடம் போய்ச் சொல்லமுடியும்? எங்கள் கிராம மே சாதிகளாய் தான் பிரிந்திருக்கிறது..

இன்றும் கழுவச் சொல்லிவிடுவாரோ என்று பயந்து தான் ஊரிலிருந்து இந்த நகரத்துக்கு வந்து விட்டேன்.. என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. நான் செத்துப் போய் விடுகிறேன்..

என்று அவன் சொன்னதைக் கேட்ட தும் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார். மனிதர்களா? இவர்கள் என்று காரித்துப்பத் தான் தோன்றியது. முதலில் இந்தச் சிறுவனின் மனதை மாற்ற வேண்டுமே. நான் என்ன செய்ய முடியும்? எல்லோரையும் அழைத்தேன்.

காற்றை அழைத்தேன்

பறவைகளை அழைத்தேன்

பூச்சிகளை அழைத்தேன்

பூக்களை அழைத்தேன்

மரங்களை அழைத்தேன்

செடிகளை அழைத்தேன்

கொடிகளை அழைத்தேன்

மனிதர்களையும் அழைத்தேன்

காற்று வீசியது. பூக்கள் ஒளிர்ந்து மணம் வீசின.  பறவைகள் இன்னிசை பாடின. பூச்சிகள் ரீங்காரமிட்டன. மரங்கள் தலையசைத்தன. செடிகளும் கொடிகளும் கூட அந்தப் பையனிடம் பேசத் தொடங்கின.

அந்தச் சிறுவன் அப்படியே என் மீது படுத்து உறங்கிவிட்டான். அவன் மனதின் பாரம் குறைய நான் அவனைப் பத்திரமாய்ப் பார்த்துக் கொண்டேன். ” என்றது சிமெண்ட் பெஞ்சு.

அப்ப நான் என்ன பண்ணிக்கிட்டிருந்தேன்என்று கேட்ட து கிரானைட் பெஞ்சு.

அங் நல்லாக்குறட்டை விட்டுத் தூங்கிகிட்டு இருந்தே..” என்று சொன்னது சிமெண்ட் பெஞ்சு.

அப்புறம் என்னாச்சு? “ என்று கேட்ட து கிரானைட் பெஞ்சு.

இருட்ட ஆரம்பித் தும் காவல்காரர் மணி வந்து பூங்கா மூடுகிற நேரம் வந்து விட்ட து என்று எல்லோரையும் அனுப்பும் போது இவனை எழுப்பினார். அவர் அந்தப் பையனுடைய அப்பாவுக்கு நண்பராம்.. அவர் அவனை அழைத்துக் கொண்டு போனார். அவ்வளவு தான்பா..” என்றது சிமெண்ட் பெஞ்சு.

இப்படி ஒரு நிலைமை எந்தக் குழந்தைக்கும் வரக்கூடாது.. “ என்ற கிரானைட் பெஞ்சு.

சரி.. இப்படி ஒரு நிலைமை வந்தால் நீ என்ன செய்வாய்? அதைச் சொல்லேன்..”

என்றது சிமெண்ட் பெஞ்சு.

கிரானைட் பெஞ்சு என்ன சொல்லியிருக்கும்?

 நன்றி - இயல் மின்னிதழ்

No comments:

Post a Comment