Monday, 2 January 2017

பேசும் தாடி - சிறுவர் நாவல்



பேசும் தாடி - சிறுவர் நாவல்


குழந்தைகள் மனதில் இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். தன்னைப்போல அனைத்து உயிர்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய படைப்புகளின் பாதையில் பேசும் தாடி  நாவலும் செல்கிறது. அது மட்டுமல்லாமல் பழமையை அல்ல..நம்முடைய மரபினையும் அறிமுகப்படுத்த முயற்சிக்கிறது. மரபு என்று சொல்லும்போது பண்பாட்டு மரபு, உணவு மரபு, உறவு மரபு, என்று நேரிடையாக இல்லாமல் பேசிப்பார்க்கிறது.  மாயாஜால யதார்த்தத்தின் வழி குழந்தைகளின் மனதைக் கவர முயற்சிக்கிறது இயற்கை உண்மைகளையும் மாயாஜாலத்தையும் இணைத்து குழந்தைகளிடம் முன் வைக்கிறது.
இயற்கையோடு குழந்தைகளை உறவாட வைக்கிறது. பேசும் தாடி. நாவலை வாசிக்கும்போது ஆனந்தமும் ஆச்சரியமும் அடைவீர்கள்..
தாத்தாவின் தாடிக்குள்ளேயிருந்தும் ஆச்சியின் சுருக்குப்பையிலிருந்தும் உங்களுக்கு ஏராளமான ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. உங்களை எதிர்பார்த்து ஆச்சியும் தாத்தாவும் கூடக் காத்திருக்கிறார்கள்…!

சென்னை புத்தகக்கண்காட்சி வெளியீடு
வானம் பதிப்பகம்


1 comment:

  1. வாழ்த்துக்கள் ஐயா
    அவசியம் வாங்கிப் படிப்பேன்
    நன்றி

    ReplyDelete