Thursday, 29 December 2016

பிறிதொரு மரணம்



பிறிதொரு மரணம் - நூல்வெளியீடு



நான் இப்போது கு.அழகிரிசாமியின் கதைபெற்ற ஸ்தலமான குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் பணி புரிந்து வருகிறேன். காலங்காலமாக நான் அங்கேயே இருப்பதைப் போன்ற உணர்வு தோன்றுகிறது. கு.அழகிரிசாமி எழுதிய குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் எழுதிய வேப்பமரம் இன்னும் சலசலத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஸ்டேஷன் மாஸ்டர் குடியிருந்த குவாட்டர்ஸ் இடிந்து விட்டதென்றாலும் அதைப்பார்க்கும் போது அதிலிருந்து ரயில் வரும் நேரத்தில் கிளம்பி வருகிற ஸ்டேஷன் மாஸ்டரைப் பார்க்க முடிகிறது. எந்த ரயிலும் இப்போது நிற்காத குமாரபுரம் ஸ்டேஷனில் இப்போதும் பயணிகள் ஏறிக் கொண்டிருக்கிறார்கள். குக்குக்கூ என்று ரயில் கிளம்புகிறது. நான் பச்சைக்கொடி அசைத்து வழியனுப்புகிறேன். பயணிகளில் இரண்டு பேர் மட்டும் ஏறவில்லை. சற்று தூரத்திலிருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனை காவியமாக்கிய கு.அழகிரிசாமி, மற்றவர் அவருடைய உற்ற தோழர் கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் எங்கள் நைனா கி.ரா.. லேசான புன்முறுவல். சிறுகையசைப்பு. அவர்கள் அங்கே கிடந்த சிமிண்ட் பெஞ்சில் உட்கார்ந்து இலக்கியம் பற்றி உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வாசனை என்னுடைய அறைக்கும் வருகிறது. குருமலையின் கணவாய்க்காற்று என்னைத் தழுவுகிறது. அவர்களுடைய பேச்சின் வழியே எனக்குள் சன்னதம் பெருகுகிறது….. உடம்பெல்லாம் நடுங்குகிறது. நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.. தொடர்ந்து…….

கு.அழகிரிசாமியின் ஆவி என் விரல்களில் இறங்கிக் கொண்டிருக்கிறது…. 

( முன்னுரையிலிருந்து )

சென்னை புத்தகக்கண்காட்சியில்.....
நூல்வனம் வெளியீடு

No comments:

Post a Comment