உதயசங்கர்
முடிவில்லாத சாலையில் பயணம்
நடந்து கொண்டிருக்கிறேன் நான்
நீங்கள் எனக்குச் சற்றுமுன்னால்
அவர் எனக்குச் சற்று பின்னால்
எல்லோருமே நடந்து கொண்டிருக்கிறோம்
தயவுசெய்து நம்புங்கள்
எங்கே போய்க்கொண்டிருக்கிறேனென்று
உங்களைப்போலவே எனக்கும் தெரியாது.
ஆனாலும் நடந்து கொண்டிருக்கிறேன்
பயணத்தைப் பந்தயமென்று
பிழைத்தவனில்லை நான்
முன்பின் நடப்பதால்
உயர்ந்தவரென்றோ தாழ்ந்தவரென்றோ
யாருமில்லை.
வெற்றியின் பூமாலை சூடிக் கொள்கிறார்கள் சிலர்
பரவாயில்லை
தோல்வியடைந்து விட்டதாகச் சிலர்
அகாலமாய் பயணத்தை நிறுத்திக் கொள்கிறார்கள்.
பாவம்
நடந்து கொண்டிருக்கிறேன் நான்
உங்களைப் போலவே
முடிவிலாத சாலையில்
நடப்பதொன்றே வாழ்வென.
என்றும் முடியாது சாலை பயணம்...
ReplyDeleteநன்றி நண்பரே.
Deleteதோல்வியடைந்து விட்டதாகச் சிலர்
ReplyDeleteஅகாலமாய் பயணத்தை நிறுத்திக் கொள்கிறார்கள்.
>>
நிஜம்தான்
நன்றி.
Deleteஅருமை.
ReplyDeleteநன்றி.
நன்றி
Deleteவணக்கம்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_6.html) சென்று பார்க்கவும்... நன்றி...
நன்றி
DeleteOnce Again...
ReplyDeleteVisit : http://blogintamil.blogspot.in/2013/08/3_21.html
வணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-