Thursday 4 July 2013

வெளியே..

matte உதயசங்கர்

தேடாதீர் என்னை

இந்தப்புகைப்படத்தில்

வெற்றியின் வெண்கொற்றக்குடைக் கர்வத்தைச்சூடி

புகழின் செங்கோலைக் கையிலேந்தி

உலகையாளும் புன்முறுவலோடு

வரிசையாய் அமர்ந்திருக்கும் வெற்றியாளர்களின்

இந்தப் புகைப்படத்தில்

தேடாதீர் என்னை

இந்தப் புகைப்படத்திலும் கூட

தேடாதீர் என்னை

தோல்வியின் முட்கிரீடம் தலையில் சூடி

சோகத்தின் சிகரத்தில் தனிமையின்குறுவாள்

இதயத்தில் இறங்க ரத்தம் சொட்டும்

தோற்றவர்களின் இந்தப் புகைப்படத்திலும்

தேடாதீர் என்னை

வெற்றியென்றோ

தோல்வியென்றோ

முற்குறிப்பில்லாத நான்

எல்லாப்புகைப்படங்களுக்கும் வெளியே

நின்று கொண்டிருக்கிறேன்

நீண்டகாலமாய்.

3 comments:

  1. வெற்றி - தோல்வி சொன்னவிதம் வித்தியாசம்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete