Friday, 7 August 2026

பூங்காவாகட்டும் பள்ளி நூலகங்கள்

 

பூங்காவாகட்டும் பள்ளி நூலகங்கள்

 

உதயசங்கர்



 

நம் பள்ளிகளில் நூலகங்கள் அவை முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா, குழந்தைகள் புத்தக வாசிப்பில் ஆர்வம் காட்டுகிறார்களா என்கிற அமைக்கப்பட்டிருக்கின்றனவா, கேள்விகளுக்குப் பதில் தேடும் தருணம் இது.

 

சிந்தனை ஊற்று

 

அறிதலின் இன்பத்தை உணரவைப்பதில் நூல்களுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. எவ்வளவு அதிநவீன எண்ணிலக்கக் கருவிகள் வந்தாலும், ஒரு நூல் தரும் இன்பத்தைக் கொடுக்க முடியாது. நூல் வாசிப்பைப் பள்ளிப் பருவத்தில் விதைக்கப் பள்ளி நூலகம்தான் சரியான இடம். நூலகம் என்பது வெறும் நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கிடங்கு அல்ல. நூல்கள் மனித குலத்தின் அறிவுச்சேகரம். மனிதகுலம் இயற்கையைப் பற்றி ஆராய்ந்து சொன்ன உண்மைகளைப் பேசும் அறிவியலும், மனித சமூகத்தின் மேன்மைக்கான உண்மைகளைப் பேசும் சமூக அறிவியலும் மனித உறவுகளின் நெருக்கடிகளைக் கண்முன்னே காட்சிகளாக்கி மனதை ஆற்றுப்படுத்தும் உளவியல் சிகிச்சைகள். மனிதர்கள் சோர்வுறும்போதெல்லாம் கனவுகளையும் லட்சியங்களையும் இலக்குகளையும் தோற்றுவிக்கும் எழுத்து ஊற்று.

 

குழந்தைகளிடம் அடிப்படைக் கல்வியறிவைப் பாடத்திட்டம் உருவாக்குகிறது என்றால், அவர்களின் சிந்தனையைச் செதுக்குவதில் பள்ளி நூலகம் மிக முக்கியமானது. அவர்களின் அறிவுத்தேடலைத் தூண்டுவதிலும் எதிர்கால இலக்குகளை நிர்ணயிப்பதிலும் ஆளுமையை வளர்ப்பதிலும் பள்ளி நூலகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த நூலகங்கள் பள்ளிகளில் எப்படி இருக்கின்றன?

 

தனி இடம் வேண்டும்

 

வகுப்பறைகளுக்கு நடுவில் ஓர் அறை அல்லது கட்டிடத்தின் மூலையில் ஓர் அறை. அந்த அறை பெரும்பாலும் பூட்டப்பட்டிருக்கும். தலைமையாசிரியர் அல்லது தமிழாசிரியர்களே அந்த நூலகப் பொறுப்பையும் சேர்த்துப்பார்க்க வேண்டும். அவர்களுடைய மற்ற பணிச்சுமைகளில் நூலகம் கடைசி இடத்தையே பிடிக்கும்.

 

ஆசிரியர்களுக்கும் பயிற்சி

 

நூற்றாண்டு கண்ட அரசுப் பள்ளிகளையும் அரசு உதவிபெறும் பள்ளிகளையும் புனரமைக்கவும், அங்குள்ள நூலகங்களில் இருக்கும் நூற்றாண்டுப் பழமையான நூல்களை மின்னூல் ஆக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி நூலகங்களில் குழந்தைகளை ஈர்க்கும் வடிவங்களில் (அனிமேஷன் படங்கள் போன்ற) புத்தக அலமாரிகளும் வாசிப்பு மேசைகளும் நாற்காலிகளும் அமைக்கப்பட வேண்டும். குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியில் நூலகம் மிக முக்கியமான பங்கு வகிக்கும் என்பதை ஆசிரியர்கள் உணர்வதற்கு அவர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

 

ஆசிரியர்கள் அவர்களுடைய ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு நூலைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேச வேண்டும். பள்ளி களில் வாசகர் மன்றங்களைப் பெயருக்காக இல்லாமல் உயிரோட்டம் உள்ளதாகப் பள்ளி நூலகர்கள் மாற்ற வேண்டும். வாசிப்புப் பயிற்சி, வாசிப்புப் போட்டி, கூடி வாசித்தல், விமர்சனப் போட்டி, கதை சொல்லுதல், கதை எழுதுதல், நாடகப் பயிற்சிகள், ஓவியப் பயிற்சிகள் போன்ற கலை இலக்கிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

 

அறிவுக்களஞ்சியங்கள்

 

மிக முக்கியமானது, பள்ளி நூலகங்களுக்கு அரசே நூல்களை வழங்க வேண்டும். அதற்கு எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், குழந்தை நலச் செயல்பாட்டாளர்கள், உளவியலாளர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவை அரசு அமைக்க வேண்டும். குழந்தை நேய நூலகங்களை ஒவ்வொரு பள்ளியும் உருவாக்க வேண்டும். இது இந்தக் காலத்தின் கட்டாயம்.

 

எல்லாவற்றையும்விடப்புத்தக வாசிப்பை இனிய அனுபவ மாகக்குழந்தைகள்உணரவேண்டும்.அதற்கான அனைத்து வடிவங்களையும் உத்திகளையும் ஆசிரியர்களும் பள்ளி நூலகர்களும் கண்டறிய வேண்டும். பள்ளி நூலகங்களை அறிவுக்களஞ்சியமாக மாற்ற வேண்டும். குழந்தைகள் வாசித்தால் இந்தப் பூமியின் முகமே மாறிவிடும். ஒளிவீசும் எதிர்காலம் நம் குழந்தைகளுக்குக் கிடைக்கும்.

 

No comments:

Post a Comment