Showing posts with label காரல் மார்க்ஸ். Show all posts
Showing posts with label காரல் மார்க்ஸ். Show all posts

Tuesday, 1 September 2026

சாதிகளின் உடலரசியல் – வாசகப்பார்வை

 

சாதிகளின் உடலரசியல் வாசகப்பார்வை

.ஷெரீப்



 

தோழர் உதயசங்கர் அவர்களது சாதிகளின் உடலரசியல் என்ற கட்டுரைத் தொகுப்பு எனக்கு மிகவும் பிடித்தமானது. வரலாற்றை பின் நோக்கி அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்வது குறித்த தகவல்களை விரும்பி படிப்பேன்.தந்தை பெரியார் அவர்கள் எதையும் ஏன்,எதற்கு, எப்படி என கேள்வி கேட்க வேண்டும் என்பார். தத்துவ ஆசான் தோழர் காரல் மார்க்ஸ் அவர்கள் கலீலியோ கண்டுபிடித்த பரிணாம வளர்ச்சி கோடபாட்டை மனித சமூக வளர்ச்சிக்கு உட்படுத்தி ஆய்வு செய்து மாற்றம் என்ற சொல்லைத் தவிர மற்றவையெல்லாம் மாறக் கூடியது என்றும் இயக்கவியல் பொருள் முதல்வாதத்தை கண்டுபிடித்தார். உழைப்பினால் தான் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது என்று சொன்னார். பொருள் முதல்வாதம் என்றால் இந்த உலகத்தில் பொருள் தான் முதலில் தோன்றியது. அதன் பிறகு தான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்பு உயிரினம் தோன்றியது. முதல் உயிரிணத்திலிருந்து பல லட்சம் ஆண்டுகளுக்குப் பின்பு தான் மனித உயிரினம் சிம்பன்ஸி குரங்கிலிருந்து தோன்றியது. இதிலிருந்து தான் மனித உயரினம் பல்கிப் பெருகியது.மனிதனின் முதல் நிலை ஆதிப் பொதுவுடமைச் சமூகமாக இருந்தது.. இதன் பிறகு ஏற்பட்ட மனித சமூக வளர்ச்சினக்குப் பின்பு தான் சாதி தோற்றம் குறித்து இந்நூல் பேசுகிறது.

மனிதன் இயற்கை உற்பாதங்களுக்கான காரணங்களை அறியாததினால் தன்னை மீறிய சக்தினை கட்டுப்படுத்த மந்திரங்களை,சடங்குகளை கண்டுபிடித்தான்.

முற்போக்கு சக்திகளும் மௌ சாட்சிகளாக மக்களின் பொதுப்புத்தியில் தலையிடும் திட்டங்களின்றி அமைதியாக இருக்கின்றன. அறிவியலின் மகத்தான சாதனைகள் எதுவும் மக்களுடைய பொது புத்தியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

மனிதன் இறந்த பின்பு சடலத்தை எரிப்பதற்காக ஒரு சட்டியில் தீக்கங்கை போட்டு அதற்கு கொள்ளிச்சட்டி என பெயரிட்டான். அந்த காலத்தில் கொள்ளிச்சட்டி தேவைப்பட்டது. ஆனால் இன்றோ அறிவியல் வளர்ச்சியில் தீப்பெட்டி, மின்சாரம் என வந்து விட்ட பின்பும் இன்றும் கொள்ளிச்சட்டி எடுத்துச் செல்கிறான். கேட்டால் சாஸ்திரம் என சொல்லி அறியாமையிலிருந்து விடுபட மறுக்கிறான்.

உடல், உடை, உணவு, இருப்பிடம் எல்லாவற்றிலும் தீட்டு என்கிற தீண்டாமையைக் கற்பித்து அதை மக்கள் மனங்களில் அவர்களின் ஒப்புதலோடு ஏற்றுக் கொள்ள வைத்தது தான் பிராமணியத்தின் வெற்றி.

தீட்டு என்கிற ஒன்றை மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் பிராமணியமும், மனுதர்மமும் நிலைத்திருக்கும். வரை

வாழ்கிற வரை கம்யூனிஸ்டாக மட்டுமே மற்றவர்களால் அடையாளம் காணப்பட்ட தோழர்கள் மரணமடைந்தவுடன் அவருடைய சாதியைச் சார்ந்தவராக,அவருடைய மதத்தைச் சார்ந்தவராக அடையாளப்படுத்தப் படுகிறார்.

பெண்களின் புழங்குவெளியை வீடாகச் சுருக்கியது மட்டுமன்றி வீட்டிலும் கூட மூலையில் இருண்டதொரு சமையலறையில் சமையல்,தாலி, கற்பு,குடும்பம்,சாங்கியம்,சாஸ்திரம்.சடங்குகள் என்ற குறுகிய வட்டத்தின் மூலம் பெண்களின் அறிவு சுதந்திரத்தையும், முடக்கினர்.

வேட்டைச் சமூகம் மறைந்து வேளாண் சமூகம் உருவாகத் துவங்கும் போது குடிமைச் சமூகத்தில் வேலைப்பிரிவினைகள் தோன்றின.

பிராமணியம் தாங்கள் கைப்பற்றிய ஆன்மிக அதிகாரத்தின் துணையோடு இறுகச் செய்தது.வேலைப்பிரிவினைகளை பிறப்பின் அடிப்படையில் வர்ணாசிரமம் கொண்டு வந்தது.

சடங்குகள் இருக்கும் வரை தீட்டு, தீண்டாமை இருக்கும், சாதிகள் இருக்கும் வரை தீண்டாமை இருக்கும்.

தங்களுக்கு மேல் எத்தனை பேர் இருந்தாலும் கவலையில்லை. ஆனால் தங்களுக்கு கீழ் ஒருவராவது இருக்க வேண்டுமென்கிற ஆதிக்க மனநிலையும் தான் பிராமணியத்தை அப்பழுக்கற்று பின்பற்றச் செய்யும் கருவிகள். இதனால் சடங்கு, சம்பிராதயம், சாஸ்திரம் என்ற பிராமணியத் தந்திரங்களை பண்பாடு என்று புரிந்து கொண்டு பண்பாட்டை காக்கிறோம்.

மனித இனம் ஆப்பிரிக்காவிலிருந்து தான் முளைவிட்டு பரவியிருக்கிறது என்று அறிவியல் பூர்வமாக நிருபித்த பிறகும் இனம்,மொழி, மதம், சாதி என்று வேறுபாடுகளை கடைபிடிப்பதும் அதை வெறியாக வளர்த்தெடுப்பதும் மட்டும் தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

பூமியின் உயிர்கள் அனைத்தும் உடல்கள் அனைத்தும் ஒரே மாதிரியான மதிப்புடையவை என்ற மதிப்புக்குரிய தீண்டுதல் சாதி, இனம்,மொழி,மதம், என்ற வெறுபாடுகளையும் கடந்த தீண்டுதல்,நான்,நீ, என்ற வேறுபாடு ஆண்,பெண்,மாற்றுப்பாலினம்,சிறு பாலினம் என்ற வேறுபாடுகள் இல்லாத தீண்டுதல். அது தான் மனித குலத்தின் இன்றைய தேவை முடிக்கிறார் தோழர் உதயசங்கர்..

உண்மையில் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.

தோழமையுடன்,

க.ஷெரீப்

நன்றி - ஜெகன்

சாதிகளின் உடலரசியல்

வெளியீடு - நூல்வனம்

தொடர்புக்கு - 97515 49992