Monday, 3 March 2025

நெய்யப்பத்தின் கதை

 

நெய்யப்பத்தின் கதை

மலையாளத்தில் - அஷீதா

தமிழில்- உதயசங்கர்



கசுமலா காக்கா, சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டி வசிக்கிற கிராமத்தில் அய்யப்பன் என்ற பெயருடைய ஒரு சிறுவனும் இருந்தான். அவன் எப்போதும் சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டியுடன் சச்சரவு செய்து கொண்டேயிருப்பான். அடிபிடி சண்டை போடுவான். சின்னுவிடம் கோவிப்பான். நாய்க்குட்டியின் மீது கல்லெறிவான். பூனைக்குட்டியின் மீது தண்ணீரை ஊற்றுவான்.

ஒருநாள் அய்யப்பனின் அம்மா நெய்யப்பம் செய்தார். நெய்யப்பம் என்ன மணம்! ஆலமரத்தின் கிளையிலிருந்து பறந்து சென்றது கசுமலா காக்கா. அடுக்களைப் பக்கமாக வாசலில் நின்று நெய்யப்பம் தின்று கொண்டிருந்தான் அய்யப்பன். அவன் கையிலிருந்த நெய்யப்பத்தைக் கொத்திப் பிடுங்கிக் கொண்டு பறந்தது.

அப்படியே சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டி எல்லாரும் விளையாடிக் கொண்டிருந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தது. கசுமலா காக்கா பறந்து வருவதைப் பார்த்ததும் மூன்று பேரும் விளையாட்டை நிறுத்தினார்கள். அவர்களுக்கு ஆசை வரவேண்டுமென்று வாயில் நெய்யப்பத்துடன் கீழே தாழ்வாகப் பறந்தது கசுமலா காக்கா.

ஒரு குதி குதித்து பூனை அதைத் தட்டிப்பறித்தது.

மின்னல் வேகத்தில் நாய்க்குட்டி அதைப் பிடிங்கிவிட்டது.

அடுத்த நிமிடம் சின்னு அதை விழுங்கி விட்டாள்.

கசுமலா காக்காவுக்கு வேதனையாகி விட்டது. இப்போதும் அந்த கிராமத்தில் குழந்தைகள் பாடுவார்கள்,

“ அய்யப்பன் அம்மா நெய்யப்பம் சுட்டார்

காக்கா கொத்திப் பறந்து போனது

பூனைக்குட்டி பாய்ந்து பறித்தெடுத்தது

நாய்க்குட்டி தாவி பிடுங்கியெடுத்தது

சின்னுக்குட்டி அதை விழுங்கி விட்டாள். “

நன்றி - புக் டே

பறயாம் நமுக்கு கதகள்

1 comment:

  1. நெய்யப்பம் கதை இனிமையாகவும்,நல்ல ருசியாகவும்,,நகைச்சுவை உணர்வுடனும் இருக்கிறது.

    கதை அமைப்பு காட்சிகளாய் கண்முன்னே விரிகிறது.கதையின் இறுதியிலுள்ள கதைப் பாடல் கதையின் மையத்தை அழகாக வெளிப்படுத்துகிறது.

    கேரள வாய்மொழிக் கதைகளை தமிழ் மொழியில் வாசித்திட மொழியாக்கம் செய்தமைக்கு தோழருக்கு நன்றியும் பாராட்டுக்களும் 💐💐💐🙏😍

    ReplyDelete