சிங்கமும் வரிக்குதிரையும்
மலையாளத்தில் - அஷீதா
தமிழில் - உதயசங்கர்
ஒரு நாள் காட்டில் ஒரு வயதான சிங்கம்
அப்படியே நடந்து போய்க் கொண்டிருந்தது. வழியில் ஒரு வரிக்குதிரையும் சேர்ந்து நடந்தது.
வரிக்குதிரை வயதான சிங்கத்திடம்,
“ எங்கே அப்படியே பொடி நடையாகப்
புறப்பட்டாச்சு மாமா? “
என்று கேட்டது. அதற்கு சிங்கம்,
“ ஆற்றங்கரை போனால் ஒரு நாய்க்குட்டியும்
ஒரு பூனைக்குட்டியும், குண்டான அழகுப்பாப்பாவும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள்
அல்லது கள்ளன் போலீஸ் விளையாடுவார்கள். அவர்கள் மூணு பேரில் ஒருத்தரைப் பிடித்தால்
போதும் இன்றைய இரவு சாப்பாடு கழிந்து விடும்.. பசியினால் கண் தெரியவில்லை..”
என்று சொன்னது.
“ பசியினால் இல்லை மாமா வயதானால்
கண்ணு தெரியாது..” என்று வரிக்குதிரை சொன்னது. அது சிங்கத்துக்குப் பிடிக்கவில்லை.
ஆனாலும் எதுவும் பேசவில்லை. பேசாமல் வந்தது.
ஆற்றின் அந்தக்கரையில் சின்னுவும்,
நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து,
“ ஹோய் ஹோய் குழந்தைகளே! “ என்று
கத்தியது. அவர்கள் மூன்றுபேரும் விளையாட்டை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.
“ எனக்குப் பயங்கரப்பசி.. ஏதாவது
உணவு இருந்தால் பொட்டலம் கட்டிக் கொண்டு வரலாமா? “
என்று சிங்கம் கேட்டது.
“ ஒவ்வொருத்தராக வந்தால் போதும்..
நான் காட்டுக்குள் போய்ச் சாப்பிட்டுக் கொள்வேன்.. பசியினால் கண்ணு தெரியவில்லை.. குழந்தைகளே..”
என்று மறுபடியும் சொன்னது. அப்போது
வரிக்குதிரை விழுந்து விழுந்து சிரித்தபடி சொன்னது,
“ பசியினால் இல்லை கேட்டீர்களா?
வயதாகி விட்டதில்லையா? “
என்று சொன்னது. சிங்கத்துக்கு
கண்மண் தெரியாத கோபம் வந்தது. ஒரே அடியில் வரிக்குதிரை கொன்றது. காட்டுக்குள் இழுத்துக்
கொண்டு போய் விட்டது. அதைப் பார்த்துப் பயந்து நின்ற சின்னுவும், நாய்க்குட்டியும்
பூனைக்குட்டியும் கதைப்பாட்டியைத் தேடி ஒரே ஓட்டமாக ஓடினார்கள்.
நன்றி - புக் டே
பறயாம் நமுக்கு கதகள்
No comments:
Post a Comment