குயிலிடம் சொன்ன கதை
மலையாளத்தில் - அஷீதா
தமிழில் - உதயசங்கர்
நல்ல கோடைகாலம்.
மாமரத்தில் இலைகள் துளிர்த்து நிறைந்திருந்தன. மாமரத்தின் அடியில் கதைப்பாட்டியும்,
சின்னுவும், நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் உட்கார்ந்திருந்தார்கள். இளம் மாவிலைகளின்
சிவப்பு நிறத்தில் பார்வதி இருந்தாள் என்று கதைப்பாட்டி சொன்னாள். அப்போது மாமரத்தின்
கிளையில் ஒரு குயில் வந்து அமர்ந்தது. அது பாடத்தொடங்கியது.
என்ன ஒரு இனிமையான குரல்! எப்படியான
இசை!
யாரும் எதுவும் பேசாமல் கேட்டுக்
கொண்டிருந்தார்கள். குயிலின் பாட்டுக்குப் பதிலாக சின்னுவும் பாடினாள். குயில் கதைப்பாட்டியின்
முன்னால் வந்து உட்கார்ந்தது.
“ பாடு குயிலக்கா! “ என்று நாய்க்குட்டி
கெஞ்சியது.
“ நான் பாடுவதால் என்ன பயன்?
“ என்று குயில் வருத்தத்துடன் சொன்னது.
“ ஏன்? என்னாச்சு? “ என்று கதைப்பாட்டி
கேட்டார்.
“ எல்லாருக்கும் என்னுடைய பாட்டு
மட்டும் தான் பிடிச்சிருக்கு.. என்னை யாருக்கும் பிடிக்கவில்லை.. என்னுடைய நிறத்தைப்
பாருங்கள் கதைப்பாட்டி.. இயற்கை என்னை கருப்பு நிறத்தில் முக்கியெடுத்து விட்டது என்று
தோன்றுகிறது.. சின்னுவைப் பார்த்தீர்களா? என்ன அழகான நிறம்! பழுத்த மாம்பழம்போல, குட்டி
முயலைப் பாருங்கள்..என்ன அழகு..” என்று சொன்னது குயில்.
பூனைக்குட்டி இரண்டு கால்களில்
எழுந்து நின்று,
“ என்னுடைய கண்கள் கூட பளிங்குக்கல்
மாதிரி இருக்கும் பாரு..”
என்று சொன்னது.
குயில் குமுறி அழுதது.
அப்போது கதைப்பாட்டி சொன்னாள்,
“ குயிலே.. இயற்கை உனக்குக் கொடுத்த
நிறத்தைப் பற்றிக் கவலைப்படாதே.. உனக்கு நல்ல இசை, மயிலுக்கு அழகு, யானைக்கு அறிவு,
கதைப்பாட்டிக்குக் கதை, இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ணு கொடுத்திருக்கிறது.. அதை
நினைத்து மகிழ்ச்சியுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்..”
நன்றி - புக் டே
பறயாம் நமுக்கு கதகள்
No comments:
Post a Comment