Thursday 23 August 2012

ஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்

உதயசங்கர்

Motohiko_Odani_Stunning_Sculptures_1

தொலைந்து போனவர்கள்

சாத்தியங்களின் குதிரையிலேறி

வனத்தினுள்ளோ

சிறு புல்லினுள்ளோ

கடலுக்குள்ளோ

சிறு மீனுக்குள்ளோ

மலையினுள்ளோ

மரத்திலுறைந்தோ

எங்கோ

எப்போதோ

எப்படியோ

தொலைந்த பின்னும்

ஆற்று மணலைப் போல

கதைகளாகத் திரும்புகிறார்கள்

கொலையுண்டதாகவோ

நோய்வாய்ப்பட்டதாகவோ

பெரும்பணக்காரனாகவோ

ரவுடியாகவோ

பிச்சையெடுத்துக் கொண்டோ

சாமியாராகவோ

காமாந்தகனாவோ

பைத்தியக்காரனாகவோ

அகதியாகவோ

போராளியாகவோ

தியாகியாகவோ

வேற்று நாட்டிலோ

வேற்று ஊரிலோ

எண்ணற்ற கதைகளாக

கலந்து விடுகிறார் காற்றில்

உயிருடன் இருந்தாலும்

மரணித்திருந்தாலும்

யாரும் விடை காணமுடியாத

யாருக்கும் விடை தெரியாத

கதைகளை எழுதிய எழுத்தாளராகி

என்றும் புதிராய்

வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஆனால்.

ஆசைப்பட்டாலும்

அத்தனை சுலபமில்லை.

தொலைந்து போவது

2 comments:

  1. அருமையான கவிதை !!! இப்படித் தான் புதிர்க் கதைகள் தோன்றி இருத்தல் வேண்டும் !!!

    ReplyDelete