எப்போதும் செய்திகளைத் தின்று
கொண்டிருந்தவனைப் பார்த்திருக்கிறீர்களா நீங்கள்?
விபத்தில் சிதைந்தவர்களை
பரிதாபத்துடன் தின்றான்
கள்ளக்காதல் வன்மக்கொலையை
பொசுங்கும் காமநாற்றத்துடன் தின்றான்
கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட சிறுமியை
அழுதுகொண்டே தின்றான்
மித்ரதுரோகக் கொலையை
நொறுக்குத்தீனியாகத் தின்றான்
அரசுக்கொலைகளை அச்சத்துடன் தின்றான்
காதல் கொலைகளைக் கனிவுடன் தின்றான்
கருணைக்கொலைகளை காணாமல் விட்டான்
சொத்துக் கொலைகளை அருவெறுப்புடன் தின்றான்
பொழித்தாவா கொலைகளை
சீ..தூ..வெனத் தின்றான்
உரிமைப்போரில் நிகழ்ந்த கொலைகளை
கோபத்துடன் தின்றான்
அகதிக்கொலைகளை சாபமிட்டுக்கொண்டே தின்றான்
கொலைகளைத் தின்று கொலைகளைத் தின்று
அஜீரணமானது மூளை
கொலைகளால் மலிந்த உலகினை மாற்ற
செய்வதென்ன என்று யோசித்தது
ஐஸ்கிரீம் பார்லரில் சென்றமர்ந்து
கனவு கண்டது ஒரு பொன்னுலகம்
பிறக்கப் போவதாக.
வேறு வழியே இல்லை. நாம் பல செய்திகளைப் படித்துதான் ஆகவேண்டும். நாம் அதனைக் கண்டுகொள்ளாமல் விட்டாலும் அது நம்மைத் துரத்திக்கொண்டே இருக்கும்.
ReplyDeleteஒவ்வொரு செய்திக்கும் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. அது முக்கியம் என்று நினைக்கிறேன். நன்றி விச்சு சார்>
Deleteஅருமையாகச் சொல்லிப் போகிறீர்கள்
ReplyDeleteஎல்லோருமே இப்படிச் செய்திகளாகத் தின்று
அஜீரணக் கோளாரில் அவதிப் பட்டுக் கொண்டுதான் உள்ளோம்
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்.
DeleteTha.ma 2
ReplyDeleteஅவர்கள் படித்த செய்திகள் அவர்களது கையில் இருக்கிற ஐஸ்கிரீம் போல உருகிப்போகிறது காலப்போக்கில்/ஆனால் செய்தியை விதைத்தவர்கள் ஐஸ்கிரீம் செய்தவர்களாயும்,விற்றவர்களாயும் ஆகிப்போகிறார்கள்.
ReplyDelete