Tuesday, 24 June 2025

தனித்துவமானவர்கள் உங்கள் குழந்தைகள்

 

தனித்துவமானவர்கள் உங்கள் குழந்தைகள்




1.
உங்கள் குழந்தைகள் தனித்துவமானவர்கள் எனவே மற்ற குழந்தைகளுடன் ஒருபோதும் ஒப்பிடாதீர்கள்.


2.
குழந்தைகளின் வயதுக்கு மீறிய பெரிய விஷயங்களை அவர்களிடம் திணிக்காதீர்கள். (திருக்குறள் ஆத்திச்சூடி ராமாயணம் மகாபாரதம் நாலடியார் வெற்றி வேற்கை கொன்றைவேந்தன் போன்றவை)


3.
குழந்தைகளை எப்போதும் அழுத்தத்திலேயே வைத்திருக்காதீர்கள். எண்ணற்ற பயிற்சிகள் ( இசை நடனம் நீச்சல் விளையாட்டு ஸ்போக்கன் இங்கிலீஷ்) என்று குழந்தைகளை விரட்டிக் கொண்டே இருக்காதீர்கள்.


4.
ஒரே நேரத்தில் அத்தனை பயிற்சிகளையும் கொடுப்பதை விட அவர்களுடைய ஆர்வத்தை அறிந்து கொண்டு ஏதாவது ஒன்றில் மட்டும் அவர்கள் ஈடுபடுமாறு செய்வது நல்லது


5.
குழந்தைகளை சுதந்திரமாக உணரச் செய்யுங்கள். மகிழ்ச்சியாக உணரச் செய்யுங்கள். அதற்கான காலம் நேரம் சூழலை உருவாக்கிக் கொடுங்கள்.


6.எங்கே குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் உணர்கிறார்களோ அங்கே மட்டுமே அவர்களுடைய படைப்பூக்கம் மிகச் சிறப்பாக வெளிப்படும்.


7.
கூட்டுச்செயல்பாடுகளில் ( விளையாட்டு கதை சொல்தல்  பாடல் பாடுதல் இப்படி )குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். அதுதான் பின்னால் அவர்கள் சமூகத்தோடு இயைந்து வாழும் உணர்வை கொடுக்கும்.


8
எப்போதும் குழந்தைகளிடம் போட்டியுணர்வை வளர்க்காதீர்கள். முதலிடம் இரண்டாம் இடம் என்பதெல்லாம் வெறும் எண்ணிக்கை மட்டுமே  குழந்தைகளின் ஆளுமையை போட்டிகளுக்குள் சுருக்கி விடக்கூடாது.


9.
குழந்தைகள் குட்டி மனிதர்கள். அந்த குட்டி மனிதர்கள் சரியான சமமான சமத்துவமான வாய்ப்புகளையும் சூழல்களையும் கொண்ட உலகில் வாழ்வதற்கான அத்தனை சந்தர்ப்பங்களையும் நாம் தான் உருவாக்க வேண்டும்


10.
குழந்தைகளின் கருத்துகளையும் அபிப்பிராயங்களையும் காது கொடுத்து கேளுங்கள். கேட்கும்போதே உடனடியாக அறிவுரை சொல்லி அவர்களை திருத்தி விட வேண்டும் என்று நினைக்காமல் உரையாடலாக மாற்றுங்கள்உங்கள் எண்ணங்களை சிந்தனைகளை குழந்தைகளிடம் உரையாடல் மூலம் கொண்டு செல்லுங்கள்.

 

No comments:

Post a Comment