Wednesday 7 November 2012

எது நோய் ?

மனிதநலம் காக்கும் ஹோமியோபதி- 3

உதயசங்கர்Homeopathic Medicine: Calendula officinalis, Chamomile

 

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நோய் எது ? என்று தெரிவதில்லை. லட்சக்கணக்கான ஆண்டுகளாக உருவான உயிரியக்கத்தின் பரிணாமவளர்ச்சியில் நமது உடலுக்குள் ஒரு மருத்துவர் உருவாகியிருக்கிறார். அவர் எப்போதும் அதாவது இருபத்திநாலுமணி நேரமும் நமது உடலியக்கத்தைக் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறார். நாம் நமது உடலுக்குச் செய்யும் நல்லது பொல்லதுகளை உற்றுக்கவனிக்கிறார். எங்கே கோளாறு ஏற்பட்டாலும் உடனே அடுத்த கணமே அப்படிக்கூடச் சொல்லமுடியாது கணத்தின் பின்னநேரத்தில் அந்த இடத்துக்கு தன் அத்தனை படைபட்டாளத்தோடு கிளம்பி விடுகிறார். உடனடியாக அந்தக் கோளாறைச் சரி செய்வதற்காக என்ன விதமான நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்த நடவடிக்கையை எடுத்து விடுகிறார். இது எதையும் நாம் சொல்லிச் செய்வதில்லை அல்லது நம்மிடம் கேட்டுச் செய்வதில்லை. இதற்காக அவர் நம்மிடம் எந்த ஃபீஸும் கேட்பதில்லை. எந்தச் சோதனைச்சாலை பரிசோதனைகளையும் செய்யச் சொலவதில்லை. ஆனால் தானாகவே நம்முடைய உடலியக்கம் இடையறாது நடப்பதற்கு அவரால் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்கிறார். அவர் நம்மிடம் கேட்பதெல்லாம் ஒன்று தான். அவர் செய்து கொண்டிருக்கும் நலமாக்கல் முயற்சிகளைத் தடுக்காதீர்கள். குழப்பாதீர்கள். வெளியிலிருந்து அந்நியக்குண்டர்களைக் ( MEDICINES ) கொண்டு வந்து தன்னுடைய நடவடிக்கைகளை அடக்கி ஒடுக்காதீர்கள்.

சரி. அப்படியானால் என்ன செய்ய வேண்டும் ?

முடிந்தவரை உடலின் மருத்துவர் செய்யும் நடவடிக்கைகளுக்கு உதவி செய்யுங்கள். ஒத்துழைப்பு தாருங்கள். அதற்கு முதலாவதாக எது நோய் என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். எது நம்முடைய உடல் நோயிலிருந்து நலமாவதற்கு செய்யும் முயற்சிகள் என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும்.

நாம் நம்முடைய சமூகப்பழக்கவழக்கம், பிழைப்பு, ஆர்வக்கோளாறு, நம் உடல் மீதுள்ள அதீதநம்பிக்கை இவற்றால் பல உடலுக்கு ஒவ்வாத செயல்களைச் செய்கிறோம். நாம் மனமுவந்து செய்கிற காரியங்களைச் செய்யுமுன்னால் உடலால் தடுக்க முடியாது. சிலநேரம் தடுக்க முயற்சிக்கவும் செய்யும். புகை பிடிக்கப் பழக ஆரம்பிக்கும் போது இருமல், நெஞ்செரிச்சல், சளி கட்டுதல் வரும். மதுவருந்த பழகும் போது ஒமட்டல், வாந்தி, வயிற்றாலை, உணவுப்பாதையில் காந்தல், தலைவலி, உடல்சூடு, நீர்ச்சத்து குறைவதால் உடல் உலர்தல், என்று பல வழிகளில் பேசிப்பார்க்கிறது. மன்றாடுகிறது. ஆனால் நாம் அப்படியெல்லாம் விட்டு விடுகிறவர்களா? விடாமல் பழகி உடலியக்கத்தின் ஆதாரங்களான கல்லீரல், சிறுநீரகம், சிறுகுடல், நரம்புமண்டலம், எல்லாவற்றையும் அரசின் ஆதரவோடு பாழ்படுத்தி விடுகிறோம். இது ஒரு பக்கம் என்றால், இரவு பனிரெண்டு மணிக்கு ரோட்டோரக்கடையில் புரோட்டாச் சால்னாவை வளைத்துப் பிடிக்கிறோம். கெட்டுப்போனச் சால்னா உடலுக்குள் விஷமாக மாறி உடல் நலத்துக்கு நிரந்தரமாக தீமை செய்து விடக்கூடாதென்று உடலின் மருத்துவர் உடனடியாக நடவடிக்கையில் இறங்குகிறார். அதிகமான நீர்ச்சத்தை சிறுகுடல், பெருங்குடலுக்கு அனுப்புகிறார். கெட்டுப்போன அந்த விஷத்தை குடல் உறிஞ்சி விடுமுன்பு எச்சரிக்கை செய்கிறார். வயிற்றில் வலி ஏற்படுத்துகிறார். வயிறு கடமுடா என்று இரைகிறது. காலையிலேயே எழுப்பி விடுகிறது. நீராய் பீச்சியடிக்கிறது. வயிற்றாலை என்ற உபாதையினால் உடலின் நீர்ச்சத்து குறைகிறது. தாகம் எடுக்கிறது. உடல் சோர்வாய் இருக்கிறது. ஓய்வெடுக்கச் சொல்கிறது. மிகமிக எளிய உணவைச் சாப்பிடச் சொல்கிறது. உடலுக்கு முழுவிஷத்தையும் வெளியேற்றிய திருப்தி வரும்வரை வயிற்றாலை போகிறது. ஆக வயிற்றாலை என்பது நோயல்ல. உடல் தன்னைத் தற்காத்துக் கொள்ள எடுக்கும் முயற்சி.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? உடனே மருத்துவரைப் பார்க்கிறோம். அவர் மலச்சிக்கலை உருவாக்கும் மருந்துகளைக் கொடுக்கிறார். அதைச் சாப்பிட்டதும் வயிற்றாலை நின்று விடுகிறது. நமக்குத் திருப்தி. ஆனால் அதற்கடுத்த இரண்டு நாளைக்கு மலம் போக மாட்டேனென்கிறது. வயிறு கனமாக பசியின்றி மந்தமாக இருக்கிறது. மறுபடியும் மருத்துவரிடம் சென்று மலச்சிக்கலுக்கு மருந்து வாங்கிச் சாப்பிட்டு மலம் கழிக்கிறோம். இதற்குள் உணவு விஷத்தை வெளியேற்றுவதற்கு உடலின் மருத்துவர் செய்த அத்தனை முயற்சிகளையும் நாம் சாப்பிட்ட மருந்துகள் முறியடித்து விட விஷம் உடலில் தங்கிவிடுகிறது. சரி இரைப்பையில் போகும்போதே உடலுக்கு ஒவ்வாதது என்று தெரிந்து விட்டால் வயிற்றுத்தசைகளை முறுக்கி வாந்தியை ஏற்படுத்துகிறது. இப்படி உடல் எல்லாவழிகளிலும் நம் நலத்தைப் பாதுகாக்க முயற்சிக்கிறது.

அடிபட்ட இடத்தில் முதலில் ரத்தக்கசிவை உறையவைக்கும் பிளேட்லெட்டுகளுக்கு கட்டளையைக் கொடுத்து உறைய வைக்கிறது. சிதைந்த செல்களைச் சுற்றி வீக்கம், வலி, இவற்றை ஏற்படுத்துகிறது. உடல் சூட்டை அதிகப்படுத்துகிறது. அதிகமான உடல் சூட்டில் வெளியிலிருந்து உடலுக்குள் அந்நிய பாக்டீரியாக்கள், வைரஸ்கள், லொட்டு லொசுக்கெல்லாம் நுழையாது. அதற்கு பொருத்தமான சீதோஷ்ணநிலையில் தான் நம் உடலில் நுழையும். உடனடியாக தன் படைவீரர்களுடன் வந்து அந்த இடத்தில் சிதைந்த செல்களை வெளியேற்ற சீழை உருவாக்கி, வெளியேற்றுகிறது. காயத்தின் தன்மையைப் பொறுத்து புதிய செல்களால் அந்தக் காயத்தை பாவு போல நெய்து மூடி விடுகிறது. இந்தக் காரியங்களைச் செய்வதற்கு நம்முடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அதற்காகவே நெறிகட்டுதல், காய்ச்சல் போன்ற குறிகளை ஏற்படுத்துகிறது.

எனவே முதலில் நமக்கு எது நோய் என்று தெரிய வேண்டும். புறவயமான காரணிகளால் உணவு, காற்று, நீர், குளிர், வெப்பம், மழை, பூச்சிகள், மிருகங்கள், ஆகியவற்றின் கடிகள், காயங்கள், ஆகியவற்றால் உடலில் ஏற்படும் மாறுமைகளுக்கு உடல் உடனடியாக எதிர்வினை புரிந்து விடும். பெரும்பாலான மாறுமைகளை நம்முடைய உடல் மருத்துவரே நலமாக்கிவிடுவார். சிலவற்றுக்கு மட்டும் வெளியிலிருந்து மருந்துப்பொருட்களின் அவசியத்தைக் கோருகிறது. ஆனால் நம்மில் பெரும்பாலோனார் நமது உடலின் மருத்துவர் நலமாக்கும் முயற்சிகளின் போதே தலையிட்டு விடுகிறோம். நாம் நமது உடலைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. அதனை ஒரு யந்திரமாக நினைத்து அலட்சியம் செய்கிறோம். ஆனால் நமது உடலும் அதன் இயக்கமும் கோடிக்கணக்கான ஆண்டுகளாக உயிர் பெற்ற அற்புத இயங்கியல் வளர்ச்சி. அதை நாம் அலட்சியப்படுத்தலாமா?

நலம் காக்க…….தொடர்வோம்.

8 comments:

  1. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com/upcoming.php

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    ReplyDelete
  2. அருமையான தொடர்...என் பெரியப்பா சித்த வைத்தியர்.அவர் சொல்வார். சளி பிடித்திருக்கிறது சளியாய் வருகிறது என்றால் வரட்டுமே அது வெளியேறவேண்டியதுதானே அதனால் வெளியேறுகிறது.அதை கெமிக்கல் போட்டு அடைத்துவைத்தால் நீண்டகால-நமக்கு புரியவே புரியாத பாதிப்பை-உடலில் இருத்திவைத்துவிடும் என்று. காய்ச்சல் நோயின் வெளியே தெரிகிற அறிகுறிஅதுவே நோய் அல்ல.ஆன்டி பையாடிக்ஸ் போட்டு துவம்சம் செய்தால் வீரியம் இல்லாத தலைமுறையாய் போகிறோம் என்பார்.

    உணவுதான் மருந்து.அப்படியும் நோய் வரும் எனில் உணவுப்பொருளையே மருந்தாக்கி உண்ணவேண்டும்.அது வழக்கமான உணவை விட வீரியமாய் இருக்கும்.அதுவே ஆயுர்வேத,சித்தவைத்திய முறை என்று...

    ReplyDelete
  3. நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  4. Sorry for english.any idea about to control longterm wheezing.

    ReplyDelete
    Replies
    1. ஹோமியோபதியில் சிறந்த மருந்துகள் இருக்கின்றன. நீங்கள் நல்ல ஹோமியோ மருத்துவரைச் சந்தியுங்கள்.

      Delete
  5. Sorry for english.any idea about to control longterm wheezing.

    ReplyDelete
  6. திரு உதயசங்கர் அவர்களின் அருமையான பதிவு: மனிதநலம் காக்கும் ஹோமியோபதி- 3
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி திரு உதயசங்கர்.

    ReplyDelete