Monday, 25 May 2026

சின்னஞ் சிறு தியாகி லியூ வென் ஷூவே - 5

 

இளையோர் கதை

சின்னஞ் சிறு தியாகி லியூ வென் ஷூவே

தமிழில்உதயசங்கர்



 

( உண்மைக்கதை

1959 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி ழீசுவான் புரொவின்ஸ், ஹோஜூவான் கவுண்டி, சுசியா மக்கள் கம்யூனைச் சேர்ந்த இளம் முன்னோடியான லியூ வென் ஷூவே மக்கள் நலனுக்காக ஒரு வர்க்க எதிரிக்கு எதிராக தீரமாகச் சண்டையிட்டுத் தன் உயிரை இழந்தான். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை உயர்த்திப் பிடிக்க  தன்னுடைய 14 வயதில் இறந்து போனான்.

பழைய சமூகத்தில் எப்படி நிலப்பிரபுகள் மக்களை அடித்துத் துன்புறுத்துவார்களென்று லியூ வென் ஷூவேக்குத் தெரியும். விடுதலைக்குப் பிறகு ஏழைகள் எழுச்சி பெற்றனர். அவனுடைய வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருந்த து. அவன் தீவிரமாக கட்சியையும் தலைவர் மாவோ வையும், நாட்டையும் சோசலிசத்தையும் நேசித்தான். அவனுடைய நாட்குறிப்பேட்டில்,

நம்முடைய நாட்டிலுள்ள ஒவ்வொரு குழந்தையும் தலைவர் மாவோவின் நல்ல குழந்தைகளாக இருக்க வேண்டும்..” .

லியூ வென் ஷூவே சீனக்குழந்தைகள் மனதிலும் மக்கள் மனதிலும் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பான்.)

5.

ஒரு நாள் ஆற்றங்கரை வழியே போகும்போது நிலப்பிரபு வாங் சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அவன் மக்கள் கம்யூனுக்குச் சொந்தமான ஆரஞ்சுப்பழங்களைத் திருடி விற்றுக் கொண்டிருந்த தைக் கண்டுபிடித்தான் லியூ வென் ஷூவே.

லியூ வென் ஷூவே அந்த நிலப்பிரபுவை கட்சியின் கிளைச் செயலாளரிடம் கூட்டிச் சென்றான். உண்மையான தகவல்களை எதிர்கொள்ளமுடியாமல் நிலப்பிரபு செய்த சதியை ஒத்துக் கொண்டான்.

 

கட்சியின் கிளைச் செயலாளர் லியூ வென் ஷூவேயைப் பாராட்டினார்.

நீ சரியாகச் செய்தாய். நாம் மக்கள் கம்யூனின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும்..”

கூட்டுப்பண்ணையில் மிளகு விளைந்து விட்ட து. லியூ வென் ஷூவேயும் கம்யூன் மக்களும் அன்று மாலையில் பறித்தனர். மறுநாள் காலையில் சந்தையில் கொண்டுபோய் விற்பனை செய்ய வேண்டும்.

கம்யூன் உறுப்பினர்கள் மிளகு பறிப்பதில் தீவிரமாக இருந்தபோது நிலப்பிரபு வாங்

தூரத்திலுள்ள ஒரு மிளகு நிலத்திற்குள் மெல்ல நுழைந்தான்.

 

லியூ வென் ஷூவே மகிழ்ச்சியாக ஒவ்வொரு கூடையாகத் தூக்கிக் கொண்டு போனான். அப்போது கட்சிச் செயலாளர், அணைக்கட்டில் வேலை பார்க்கும் அவனுடைய அம்மா அன்று மாலை திரும்பி வருவார். அவன் போய் அவருக்கான இரவு உணவைத் தயாரித்து வைக்க வேண்டும் என்று லியூ வென் ஷூவேயிடம் சொன்னார்.

லியூ வென் ஷூவே வீட்டுக்குப் புறப்பட்டான். அம்மாவை நினைத்த தும் ஓடத்தொடங்கினான்.

போகும்வழியில் திடீரென நிழலில் ஒரு கரிய உருவத்தைப் பார்த்தான்.. யாராக இருக்கும்?

வேறு யார்? அந்த நிலப்பிரபு வாங் தான். அவன் மிளகாயைத் திருடிக் கொண்டிருந்தான். லியூ வென் ஷூவே கத்தினான்,

வாங் யுங் ஷூவே மறுபடியும் கம்யூன் பொருளைத் திருடிக்கிட்டிருக்கீங்க..”

 நிலப்பிரபு லியூ வென் ஷூவேயைப் பார்த்தான். அவனைப் பார்த் தவுடன் பயந்தான். வெறுத்தான். அங்கிருந்து ஓடிப் போக முயற்சித்தான். ஆனால் லியூ வென் ஷூவே அவனைத் தடுத்து நிறுத்தினான்.

( தொடரும் )

நன்றி - புக் டே


No comments:

Post a Comment