இளையோர் கதை
சின்னஞ் சிறு தியாகி லியூ வென் ஷூவே
தமிழில் – உதயசங்கர்
( உண்மைக்கதை
1959 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி ழீசுவான் புரொவின்ஸ், ஹோஜூவான் கவுண்டி, சுசியா மக்கள் கம்யூனைச் சேர்ந்த இளம் முன்னோடியான லியூ வென் ஷூவே மக்கள் நலனுக்காக ஒரு வர்க்க எதிரிக்கு எதிராக தீரமாகச் சண்டையிட்டுத் தன் உயிரை இழந்தான். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை உயர்த்திப் பிடிக்க தன்னுடைய 14 வயதில் இறந்து போனான்.
பழைய சமூகத்தில் எப்படி நிலப்பிரபுகள் மக்களை அடித்துத் துன்புறுத்துவார்களென்று லியூ வென் ஷூவேக்குத் தெரியும். விடுதலைக்குப் பிறகு ஏழைகள் எழுச்சி பெற்றனர். அவனுடைய வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருந்த து. அவன் தீவிரமாக கட்சியையும் தலைவர் மாவோ வையும், நாட்டையும் சோசலிசத்தையும் நேசித்தான். அவனுடைய நாட்குறிப்பேட்டில்,
” நம்முடைய நாட்டிலுள்ள ஒவ்வொரு குழந்தையும் தலைவர் மாவோவின் நல்ல குழந்தைகளாக இருக்க வேண்டும்..” .
லியூ வென் ஷூவே சீனக்குழந்தைகள் மனதிலும் மக்கள் மனதிலும் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பான்.)
1.
வென் ஷூவேயின் தந்தை நேர்மையான மனிதர். அவர் பண்ணையாருக்காகப் போதைப்பொருளானக் கஞ்சா வை வியாபாரம் செய்ய முடியாது என்று மறுத்து விட்டார். அதனால் கொடூரமான குணம் கொண்ட அந்தப் பண்ணையாரும் எதிர்ப்புரட்சிபடையினரின் அமைதி காக்கும் காவலர் படை வென் ஷூவேயின் அப்பாவை சிறையில் தள்ளினார்கள்.
அந்தச் சின்னஞ்சிறுவனின் அம்மா அவனை அப்பாவைப் பார்ப்பதற்காகச் சிறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே எலும்பும் தோலுமாக இருந்த அப்பாவைப் பார்த்தான். அப்போதிருந்த பழைய சமூகத்தில் ஏழைகள் தங்களுடைய துயரங்களை எங்கே போய்ச் சொல்வார்கள்?
வென் ஷூவேயின் அம்மா அந்தப் பண்ணையாரின் வீட்டில் வேலை செய்ய வேண்டும். அந்தப் பண்ணையாரின் மனைவி, அம்மாவைப் பார்ப்பதற்கு மகனை அந்தப் பண்ணையாரின் மனைவி அனுமதிப்பதில்லை. ஆனால் அவன் மீது கோபமான நாயை ஏவி விடுவார்.
அந்த நாய் பையனைக் கடித்து குதறி விடும். அவன் உடலெங்கும் ரத்தம் சிந்தும். அந்தப் பண்ணையார்களை அவன் அப்படி வெறுத்தான்.
( தொடரும் )
நன்றி - புக் டே

No comments:
Post a Comment