குழந்தைகளுக்கான தத்துவம் 3
விலங்குகள் பறவைகள் பூச்சிகளின் சிந்திக்குமா?
உதயசங்கர்
தாவரங்களும்
சிந்திக்கின்றன. அதற்கும் ஒரு தத்துவம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டோம். அதே
மாதிரி தான் விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் சிந்திக்கின்றன.
உயிர் வாழ்தல்
இனப்பெருக்கம்
உயிர்
வாழ்தலுக்கு இரையை அடையாளம் காணுதல் அதாவது எதைச் சாப்பிடலாம். எதைச் சாப்பிடக்கூடாது என்று தேர்ந்தெடுத்தல். இரையைத் தேடுவது, அதாவது
சாப்பிடும் இரை அதிகமாக இருக்கும் இடங்களில் தன்னுடைய வாழ்விடத்தை அமைத்துக் கொள்ளுதல்.
தன்னைப்
பாதுகாத்தல். எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு, இயற்கைப் பேரிடரிலிருந்து பாதுகாப்பு இதற்கான தகவமைப்புடன் கூடிய உடலமைப்பை உருவாக்குதல்.
அடுத்தது
இனப்பெருக்கம். இயற்கையில் தங்களுடைய இருப்பையும் தொடர்ச்சியையும் தக்கவைத்துக் கொள்ளவும் உணவுச்சங்கிலியில் தன்னுடைய இருத்தலின் மூலம் தன்னைச் சார்ந்தோ அல்லது தான் சார்ந்தோ இருக்கக்கூடிய விலங்குகளுக்கு உதவி செய்வது, போன்றவற்றிற்கு
இனப்பெருக்கம் அவசியம்.
உங்களுக்குத்
தெரிந்திருக்கும். புற்கள் இல்லையென்றால் அவற்றை மேயும் விலங்குகள் மறைந்துவிடும்.
மேய்ச்சல்
விலங்குகள் இல்லையென்றால் அவற்றை இரையாகச் சாப்பிடும் ஊனுண்ணி விலங்குகள் மறைந்து விடும்.
ஒரு
மானைப் புலி வேட்டையாடுவதைப் பார்க்கும் நாம் பரிதாபப்படுகிறோம்.
ஆனால்
மானைச் சாப்பிடும் விலங்குகள் இல்லையென்றால் என்ன ஆகும்?
மான்களின்
கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகிவிடும். அவை பூமியில் பச்சையாக அனைத்துத் தாவரங்களையும் சாப்பிட்டுவிடும். அந்தத் தாவரங்களைச் சார்ந்து தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ள பூச்சிகள், புழுக்கள்
மறைந்து விடும். அந்தப்
பூச்சிகளை புழுக்களைச் சாப்பிட்டு வாழும் பறவைகளும் சிறுவிலங்குகளும் மறைந்து விடும்.
இப்படிச்
சொல்லிக் கொண்டே போகலாம். இயற்கை
ஒரு வலைப்பின்னல் மாதிரி அனைத்து உயிர்களையும் பிணைத்து வைத்திருக்கிறது. எவ்வளவு சிறிய வைரஸாக இருந்தாலும் சரி உருவத்தில் பெரிய யானையாக இருந்தாலும் சரி ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு தனித்தனியான குணம், உடல், பழக்கவழக்கங்கள், உணவுமுறை, இனப்பெருக்கம், இவற்றைக் கொடுத்திருக்கிறது. அல்லது ஒவ்வொரு உயிரும் இயற்கையில் தாங்கள் வாழ்வதகேற்ப சிறப்பு குணங்களை பரிணாமவளர்ச்சியில் பெற்றிருக்கின்றன.
ஒரு
இலைவெட்டி எறும்பு கிட்டத்தட்ட ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் செய்கிறது. ஒரு கரப்பான்பூச்சி இரண்டரை கோடி வருடங்களாக அழியாமல் அணுகுண்டு தாக்குதலில் கூட அழியாமல் இன்றுவரை இருக்கிறது. இப்படிச் சிறப்பான குணாதிசயங்கள் ஒவ்வொரு உயிருக்கும் இருக்கிறது.
அதை
நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால்
நாம் இப்போது தெரிந்து கொள்ள வேண்டியது. அந்த
உயிரினங்கள் அதற்கு முன்னால் எத்தனை லட்சம் ஆண்டுகளாய் மாற்றங்களைச் சந்தித்திருக்க வேண்டும். இல்லையா?
இந்த
மாற்றங்கள் தானாக உருவானதா? அல்லது
திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா?
உண்மை
என்ன?.
புலனுணர்விலும்
அறிவிலும் கீழ்ப்படியில் இருக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் தாங்கள் இப்படி மாறவேண்டும், இப்படி மாறக்கூடாது என்றெல்லாம் முடிவு செய்யும் அளவுக்கு சிந்திக்கத் தெரியாது.
அந்த
மாற்றங்கள் எல்லாம் அந்தந்த உயிரின் உயிர்வாழும் உள்ளுணர்வு ( Survival Instict ) அதன் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களின் விளைவு.
அதே
போல புதிய உயிர்கள் தோன்றுவதும் மரபணுக்களில் நிகழும் மாற்றம் அல்லது சிதைவு தான் காரணம் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
ஹோமோ
சேப்பியன்ஸ் என்ற அறிவியல் பெயர் சூட்டப்பட்ட நாம் தோன்றியது கூட மரபணுக்களில் ஏற்பட்ட சிதைவினால் தான் ( Chromosome Mutations ) என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.
ஆக
விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளுமே கூட தங்களுடைய வாழ்க்கையை இயற்கையைச் சார்ந்து தகவமைத்துக் கொண்டிருக்கின்றன. அவை இயற்கையைப் பாதிப்பதில்லை. இயற்கையை ஒட்டிய சிந்தனையையும் தத்துவத்தையும் கொண்டிருக்கின்றன என்று சொல்லலாமா?
இவற்றிலிருந்து
மனிதன் மட்டும் மாறுபடுகிறான்.
எப்படி?
( தத்துவம் அறிவோம் )
நன்றி - இயல் மின்னிதழ்

No comments:
Post a Comment