Saturday 30 August 2014

குழந்தைகளின் அற்புத உலகில்

kuzhanthaikalin arputha ulagil உதயசங்கர்

நம் நாட்டில் பூமியெங்கும் கதைகள் இடைவெளியின்றி முளைத்துக் கிடக்கின்றன.

குழந்தைகள் பிறந்து பாடுகின்ற தாலாட்டில் உறவு முறைகளை குழந்தைக்கு அறிமுகப்படுத்துவதும்,( மாமா அடிச்சாரோ மல்லிகைப்பூ செண்டாலே, அத்தை அடிச்சாரோ அல்லிப்பூ செண்டாலே, ) குழந்தைகள் விளையாடும் போது வரலாற்று நிகழ்வுகளைக் கதைப் பாடலாகப் பாடுவதும் ( ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூ பூத்தது… இம்புட்டு பணம் தாரேன் விடுடா துலுக்கா.. விடமாட்டேன் மலுக்கா..) இப்படி கதைகளோடு பிறந்து கதைகளோடு வளர்ந்து வருகிறோம். ஆனால் இன்று குழந்தைகள் எப்படியிருக்கிறார்கள்? ஏன் கதைகள் குழந்தைகள் உளவியலில் ஒரு தீர்மானகரமான முக்கிய பாத்திரம் வகிக்கிறது என்று நாம் நினைக்கிறோம். நம்முடைய குழந்தைகளிடம் நாம் கதைகளைச் சொல்லியிருக்கிறோமா? நம் பள்ளிக்கூடங்களில் கதைகளைச் சொல்வதற்கான ஏதாவது ஏற்பாடு இருக்கிறதா?

வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி வந்ததிலிருந்து குடும்ப உறுப்பினர்களே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை என்றான பிறகு குழந்தைகளிடம் மட்டும் பேசுவதற்கு நேரம் கிடைத்து விடவா போகிறது? அப்படியே பேசினாலும் பாடம், பரீட்சை, மதிப்பெண், ரேங்க், இவைகளைத் தவிர வேறு விசயங்கள் பேச முடிகிறதா? நிதானமாக பொறுமையாக, குழந்தைகளிடம் அவர்கள் பார்க்கிற இந்த உலகத்தைப் பற்றி, பள்ளிக்கூடத்தைப் பற்றி, அவன்/ அவளுடைய நண்பர்கள் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டறிந்திருக்கிறோமா? குழந்தைகளின் மன அழுத்தம் பற்றி நாம் என்றாவது கவலைப்பட்டிருக்கிறோமா? நம்முடைய குழந்தைகளை தொலைக்காட்சிப்பெட்டி, சினிமா, ரஜினி, விஜய், அஜித், என்று யார் யாரோ வளர்க்க அநுமதிக்கிறோமே, நாம் என்றாவது நம்முடைய குழந்தையை நாம் தான் வளர்க்கவேண்டும் என்று நினைத்திருக்கிறோமா? அப்படி நினைத்திருந்தால் நாம் நம்முடைய குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லியிருக்கவேண்டும். சொல்லியிருக்கிறோமா?

வெளியீடு- என்.சி.பி.ஹெச்.

விலை.ரூ.90

1 comment:

  1. சமீபத்தில் வாசித்த புத்தகங்களில் மிகவும் முக்கியமாக கருதும் புத்தகம் குழந்தைகளின் அற்புத உலகில். ஒவ்வொரு கட்டுரையிலும் முக்கியமான வரிகளை வண்ணமயமாக்கி புத்தகமே அழகாய் இருக்கிறது. என்னுடைய மகளை நன்றாக வளர்க்க தங்களது இந்நூல் பெருஉதவி புரியும் என நம்புகிறேன். நன்றி.

    ReplyDelete