சதுரங்கவாழ்க்கை 15
மருத்துவத்தின் தத்துவம்
உதயசங்கர்
மாரியப்பன் சுற்றிலும் பார்த்தான். தீக்காயத்தினால் அனத்திக் கொண்டிருந்த அந்த்ச் சிறுபெண்ணின் அருகில் கீழே படுத்திருந்த அந்தக் கிழவி வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தார். இப்போது அந்தக் கட்டிலிலிருந்து முனகல் விட்டு விட்டுக் கேட்டது. கடைசிக் கட்டிலிலிருந்து அம்மா அம்மா என்ற குரல் கேட்டது. மேஜை மீது படுத்திருந்த நர்ஸ் எழுந்திரிக்கவில்லை. மாரியப்பான் மேஜைக்கருகில் சென்று
“
சிஸ்டர் சிஸ்டர்.. “ என்றான். அந்த நர்ஸ் கண்களைத் திறக்கமுடியாமல் திறந்தார். அவன்
புலம்பிக் கொண்டிருந்த கட்டிலைக் காட்டினான். நர்ஸ் எழுந்து கட்டிலின்
அருகில் சென்று ஏதோ கேட்டுவிட்டு வந்து ஒரு மாத்திரையை எடுத்துக் கொண்டுபோய்ச் சாப்பிட
வைத்தார். பிறகு மேஜைக்கு வந்து ஒருமுறை எல்லாம் சரியாக இருக்கிறதா
என்று பார்த்துவிட்டு மீண்டும் தலை சாய்த்தார்.
மாரியப்பன் பாயில் படுத்தான். இரவின்
ஒவ்வொரு கணத்திலும் முனகல், வலியினால் அனத்தல், சில சமயம் கூப்பாடு, முணுமுணுப்பு, புலம்பல், கேட்டுக் கொண்டேயிருந்தது. விதவிதமான குரல்களில் விதவிதமான ஆலாபனைகளில் இரவே அப்படி புலம்பிக் கொண்டிருந்ததாக
நினைத்தான். இதுவரை அவன் பார்த்த இரவாக இல்லை. இரவின் குளிர்மையில் தானே இந்த உலகம் தன்னை மறந்து உறங்குவதும் தன்னைத் தானே
தாலாட்டிக் கொள்வதும், தன்னைத் தானே புத்தாக்கம் செய்து கொள்வதும்,
தன்னைத் தானே பரிசீலனை செய்து கொள்வதும் தன்னைத்தானே மாற்றிக் கொள்வதும்,
தன்னிலிருந்து புதிய ஒரு நாளை வரவேற்கத் தயாராக இருப்பதுமாக இரவின் மீது
அவன் வைத்திருந்த மென்மையான அந்தக் கற்பனையில் நெருப்பு பற்றியதைப் போலிருந்தது.
இங்கே இரவின் ஒவ்வொரு கணமும் குரூரமாக,
கொடிய கனவுகளின் வெளிப்பாடாக, சித்ரவதைக் கூடமாக,
நோய்மையின் கூடாரமாகத் தெரிந்தது. மனிதர்களுக்கு
நோய் ஏன் வருகிறது? நோய்களே இல்லையென்றால் மருத்துவமனைகளே தேவையில்லையே.
அப்போது தான் சரவணனுடைய அப்பா சண்முகசுந்தரம் ஞாபகத்துக்கு வந்தார்.
ஒருமுறை மாரியப்பனின் வயிற்றில் வாயு ஏற்று பலூன் மாதிரி ஊதிவிட்டது.
ஒரு பானையை வயிற்றில் கட்டி வைத்த மாதிரி கனத்துக் கிடந்தது.
அப்போது சரவணன்,
“
டேய்.. எங்கப்பா மருந்து கொடுப்பாரு.. வர்றியா? “
என்று கேட்டான். சரவணனின்
அப்பா கால்நடை மருத்துவமனையில் வேலை பார்க்கிறாரென்று தெரியும்.
“
அவரு டாக்டருக்குப் படிச்சிருக்காரா? “
“
இல்லடா.. ஹோமியோ மருந்து.. பல்லி முட்டை மாதிரி இருக்கும்..”
மாரியப்பனுக்கு ஆச்சரியம். அப்படி
ஒரு மருத்துவத்தை அவன் அப்போது தான் கேள்விப்படுகிறான். டாக்டர்.சென்னகேசவன், அரசு மருத்துவமனை தவிர வேறு மருத்துவமனைகளோ,
மருந்துகளோ இருக்கலாம் என்று யூகித்துக் கூடப் பார்க்கவில்லை.
கதிரையும் துணைக்கழைத்துக் கொண்டு சரவணன் வீட்டுக்குப் போனான் மாரியப்பன். அப்போது சரவணனுடைய அப்பா சொன்னது ஞாபகத்துக்கு
வந்தது. ஆஸ்பத்திரி பாயில் படுத்துக் கண்களை மூடிக் கொண்டே யோசித்தான். சரவணனின் அப்பாவின் குரல் காதுகளில் கேட்டது.
நோய்மையின் “ தம்பி! நீ கேட்டது சரிதான்.. ஆதிமனிதனுக்கு மருத்துவம் தெரியுமா? அவன் எப்படி நோய்களைக் குணப்படுத்தியிருப்பான்? இயற்கை ஒவ்வொரு படைப்பை உருவாக்கும் போதும் அதற்கென சில உள்ளுணர்வுகளைக் கொடுத்திருக்கின்றன. எல்லா உயிர்களின் உள்ளுணர்வின் ஞாபக அடுக்குகளில் உறைந்துள்ள செயல்பாடு தான் தன்னைக் குணப்படுத்தல்.
பாரேன்.. நாய், பூனை, போன்ற மிருகங்களைக் கவனித்துப்பார்.
மிகச் சாதாரண நோய்களில் உடல்நிலை சரியில்லையென்றால் உணவெடுக்காது. நாய் அருகம்புல்லைக் கடித்துத் தின்னும். சிறிது நேரத்திலேயே வயிற்றில் செரிக்காமல் தங்கி விட்ட விஷப்பொருளை கக்கி விடும். ஏன் சிங்கம் புலி கூட உணவுச்செரிமானம் ஆக சில செடிகளின் இலைகளைச் சாப்பிடும்.. நாய்க்கோ, பூனைக்கோ, புலிக்கோ யார்
சொல்லிக் கொடுத்தார்கள். இந்த ந்தச் செடிகளில் மருத்துவ குணம் இருக்கிறதென்று எப்படித்
தெரியும்?
அதன்
அனுபவத்தில் கிடைத்த மருத்துவக்குறிப்பை உள்ளுணர்வில் பதிந்து மரபணுக்கள் வழியாக தலைமுறை தலைமுறையாக
க் கட த்துகின்றன. தேவைப்படும்போது அந்த மருத்துவக்குறிப்பு ஞாபகங்களின் ஆழத்திலிருந்து மேலெழுந்து வந்து அலையடித்து அதற்கு வழிகாட்டுகிறது. இது அனைத்து விலங்குகள், தாவரங்களுக்கும் பொருந்தும்..ஆனால் மனிதன் சமூகவயமாகும் போது கொஞ்சம் கொஞ்சமாக தன் உள்ளுணர்வின் பதிவுகளை அழித்து விட்டான். வேலைப்பிரிவினைகள் உருவாகும் போது மருத்துவம், மந்திரச்சடங்குகளோடு இணைந்து விட்டது. ஆதியில் மருத்துவம் மிக உன்னதமான சேவையாகக் கருதப்பட்டது. மருத்துவத்துக்கு ஈடாகப் பொருள் பெறுவதே பாவம் என்று நம்பிய காலம் ஒன்றிருந்தது. மருத்துவர் என்று ஒரு சாதியே உருவானது, ஆனால் எல்லா நோய்களுக்கும் மருத்துவர்களைத் தேடிப்போவதில்லை. பெரும்பாலும் கை வைத்தியமாக வீடுகளில் சாதாரண நோய்களைக் குணமாக்கி விடுவார்கள். காய்ச்சல், சளி, தலைவலி, என்று அடிக்கடி வரக்கூடிய நோய்களுக்கு, உணவுப்பத்தியம், பச்சிலைச்சாறு, கஷாயம், சூரணம், என்று கொடுத்துக் குணப்படுத்தி விடுவார்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என்று இயற்கையோடு இயைந்து வாழ்ந்த காலங்கள் இருக்கத்தான் செய்தது. சித்தர்களின் தாக்கம் எப்படி நம்முடைய அன்றாட வாழ்விலும் உணவு முறைகளிலும் இருக்கிறது என்பது தனியாக ஆய்வு செய்ய வேண்டிய ஒன்று.”
“ ஆமாங்க அங்கிள்.. என்னோட அம்மா ஒரு நாளும் ஆசுபத்திரிக்குப் போனதில்லை.. எந்த நோயாக இருந்தாலும் அதுக்குன்னு ஒரு கஷாயம் வைச்சி சாப்பிட்ருவா… சரியாயிரும்.. கடைசிக்காலத்தில் கீழே விழுந்த பிறகு தான் ஆசுபத்திரின்னு போனோம்.. சொல்லப்போனா
அவா வாழ்க்கையில மொதமொறயா ஆஸ்பத்திரியைப் பார்த்த தே அப்பதான்.. ஆனா இப்ப பாருங்க முணுக்குன்னா ஆசுபத்திரி தான்…”
என்றான்
கதிர்.
” காரணம் என்ன தெரியுமா கதிர்! இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆங்கில மருத்துவம் தவிர வேறு மருத்துவம் இருக்கிறதா என்று கூடத் தெரியாது. பலருக்கு ஆங்கில மருத்துவம் தவிர மற்ற மருத்துவமுறைகள் எல்லாம் நாட்டு வைத்தியம் தான். ஆங்கிலவைத்தியம் மட்டும் தான் நவீன மருத்துவம். மற்றதெல்லாம் கண்ட்ரி மெடிசின். நோயுற்ற மனிதனை நம்பாமல் சோதனைச்சாலை முடிவுகளின் அடிப்படையிலே மருத்துவம் செய்யும் ஆங்கிலமருத்துவம் நவீன மருத்துவம் என்று பெயர் பெற்றிருக்கிறது.
எந்த மருத்துவமுறையாக இருந்தாலும் நமது உயிரையும், உடலையும் தன்னிச்சையாக கையாளுவதற்கு உரிமை கிடையாது. நமக்குக் கொடுக்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள், பற்றி அறிந்து கொள்ள நமக்கு முழு உரிமை உண்டு. இன்னும் சொல்லப் போனால் நமக்குத் தரப்படும் மருந்துகள் அதன் விளைவுகள், பக்கவிளைவுகள், எல்லாவற்றைப் பற்றியும் சொல்லுவதற்குக் கடமைப்பட்டவர்கள் மருத்துவர்கள். எந்த மருத்துவரும் கடவுள் அல்ல. எல்லாத்துறைகளைப் போல மருத்துவத்துறையை அவர் படித்திருக்கிறார். அவ்வளவு தான். அதே போல எந்த மருத்துவமும் இயற்கையின் விதிகளுக்கு மாறாக நமது உடலில் செயல்பட முடியாது.”
“ அப்படின்னா என்னது அப்பா? “
என்று சரவணன் கேட்டான். மாரியப்பன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.
“ ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை… இயற்கை தனக்கென சில தனித்துவமான விதிகளைக் கொண்டு இயங்குகிறது. அதன் ஒவ்வொரு செயலும் அந்த விதிகளின்படியே நிகழ்கிறது….ஏற்கனவே இருப்பதைத்தான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள்… அது ரிலேட்டிவிட்டி தியரியாக இருக்கலாம்..புவி ஈர்ப்பு விசையாக இருக்கலாம்…பரிணாமக்கோட்பாடாக இருக்கலாம்… இயக்கவியலாக இருக்கலாம்…
அல்லது இருந்து கொண்டேயிருக்கிறவற்றில் ஒரு தொடர்பைக் கண்டுபிடித்து அதை ஒரு தியரியாகத் தொகுத்துச் சொன்னார்கள். அந்த வியாக்கியானங்களையே தத்துவமாகவும் மாற்றினார்கள்..”
“ என்னது தத்துவமா?..”
என்று
கேட்டுச் சிரித்தான் மாரியப்பன். சரவணனின் அப்பாவும் சிரித்தார்.
” தத்துவம் என்றால் பெரிய வார்த்தை மாதிரி இருக்குல்ல… தத்துவம் என்றால் என்ன? மிக எளிமையாகச் சொல்வதென்றால் நீ எதைப் பற்றிச் சொல்கிறாயோ அதைப் பற்றிய விளக்கம் அல்லது. கண்ணோட்டம். உதாரணத்துக்கு இந்த வாழ்க்கையில் நாம் பட்டுக் கொண்டிருக்கும் கஷ்டநஷ்டங்களுக்கு நம்முடைய தலைவிதி என்று பெரும்பாலானோர்கள் நினைக்கிறார்களே அது ஒரு தத்துவவெளிப்பாடு. இல்லை இந்த கஷ்டநஷ்டங்களுக்குக் காரணகாரியங்கள் இருக்கின்றன என்று சிறுபான்மையோர் நினைக்கிறார்களே அதுவும் ஒரு தத்துவ வெளிப்பாடு தான். இப்படி வாழ்வின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் ஒரு தத்துவநோக்கு பின்னிப் பிணைந்துள்ளது. நாளுக்கு நாள் நம்முடைய உணவுப்பழக்கம், உடை, இருப்பிடம், என்று எல்லாம் மாறிக் கொண்டேயிருப்பதற்குப் பின்னால் ஒரு தத்துவம் இருக்கிறது. அந்தத் தத்துவமே அந்த அரசு நிர்வாகத்தை நிர்மாணிக்கிறது. அதைச் செயல்படுத்துகிறது. தத்துவத்தின் பார்வையைப் பொறுத்தே அந்தத் தத்துவம் யாருக்கானது? அதன் நோக்கம் என்ன? என்று தெரிந்து கொள்ள முடியும். முதலாளித்துவத் தத்துவம் முதலாளிகளுக்குச் சார்பான அரசியல், சட்டம், நீதி, கல்வி, இவற்றைத் தான் செயல்படுத்தும். போலியான ஜனநாயக நடைமுறைகள் மூலம் எல்லோரையும் ஏமாற்றும். எனவே சாமானியர்களுக்கு இதெல்லாம் தெரியாதென்பதை
விட இவற்றை அவர்கள் தெரிந்து கொள்ளக் கூடாதென்பதற்காகவே தான் சினிமா, பத்திரிகைகள்
போன்றவை செயல்படுகின்றன. ஏனெனில் இவற்றையும் முதலாளித்துவம் தான் உற்பத்திச் செய்கிறது. அதனால் முதலாளித்துவத்தின் அசுர நிதிமூலதனப் பசிக்கு மக்கள் இரையாகிறார்கள். ஆனால் எல்லாத்தத்துவங்களும் தங்கள் கருவுக்குள்ளேயே அதற்கு மாற்றான தத்துவத்தின் விதைகளைக் கொண்டிருக்கும். ”
“ அங்கிள் புரியல.. அங்கிள்..” என்ற கதிரைப் பார்த்த சரவணனின் அப்பா,
“ இன்னும் கொஞ்சநாள் கழித்துப் புரியும்.. இப்பதானே கல்லூரி முடிச்சிருக்கீங்க…எல்லாவற்றிலும் இருப்பதைப் போல மருத்துவத்துக்கும் ஒரு தத்துவம் இருக்கிறது. அது தான் அந்த மருத்துவ முறையைத் தீர்மானிக்கிறது.
“ அப்படியா..மருத்துவத்துக்குத் தத்துவமா? “ என்று கேட்டான் சரவணன்.
” ஆமா… ஆதியில் வேட்டைச்சமூகமாக இருந்தபோது மனிதன் மற்ற விலங்குகளைப் பார்த்தும் தன்னுடைய அனுபவத்தில் கிடைத்த மருத்துவக் குறிப்புகளினால் தன் நோய்களைக் குணப்படுத்தினான்.….எப்போது விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டு ஒரே இட த்தில் வாழத் தொடங்கினானோ அப்போது அவனுடைய வாழ்க்கை முறை மாறிவிட்ட து. வர்க்கங்கள் உருவாகத் தொடங்கின. ஏற்றதாழ்வுகள் உருவாயின. அப்போது மருத்துவத்தை ஒரு சில குறிப்பிட்ட மனிதர்கள் மட்டுமே பயன்படுத்தத் தொடங்கினார்கள். அந்தக் குறிப்பிட்ட மனிதர்கள் மருத்துவத்தை மட்டுமே ஸ்பெஷலைஸ் செய்து புதிய மருந்துகளைக் கண்டுபிடித்தார்கள்… அப்படித்தான் சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவமுறைகள் தோன்றின. அந்த மருத்துவ முறைகள் நிலப்பிரபுத்துவத் தத்துவப்பார்வை கொண்டவை. ஆங்கில மருத்துவமுறை முதலாளித்துவ தத்துவப்பார்வை கொண்டது. ”
“ சரி அதனால் என்ன? “ என்று கேட்டான் மாரியப்பன்.
” இரண்டுக்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு… நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தில் மருத்துவம் புனிதமானதாகக் கருதப்பட்டது. அது மந்திரத்தன்மை கொண்டதாகவும், ரகசியமாய் செய்ய வேண்டியதாகவும் கருதப்பட்டது. அந்த மருத்துவ ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அப்படி பகிர்ந்து கொண்டால் அது பலிக்காது என்றும் நம்பப்பட்டது. மருத்துவம் நிலப்பிரபுத்துவத்தின் உற்பத்தி உறவுகளைப் போல மதிப்பு மிக்கதாக இருந்தது. மனிதர்களின் தனித்துவத்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்தது.
ஆனால்
ஆங்கில மருத்துவமுறை முதலாளித்துவ தத்துவப்பார்வை கொண்டது. அதற்குச் சந்தை தான் முக்கியம். எல்லாவற்றையும் விற்கவோ, வாங்கவோ முதலாளித்துவம் முயலும். மைதாஸின் மனநிலை கொண்ட அதன் லாபவெறிக்கு எதுவும் பொருட்டல்ல. அதன் உற்பத்தி உறவுகள் சந்தையோடு தொடர்புடையது என்பதால் அது எதையும் மதிக்காது. எந்த விழுமியங்களையும் ஏற்காது. அப்படியே தன்னுடைய சந்தை தேவைகளுக்கேற்ப மதிப்பீடுகளை மாற்றிக் கொண்டேயிருக்கும். அதற்கு எல்லாமே எல்லாருமே பண்டங்கள் தான். எப்படி மனிதர்களுக்காக பொருட்களையும் பொருட்களுக்காக மனிதர்களையும் உருவாக்குகிறதோ அதே போல நோய்களுக்காக மருந்துகளையும் மருந்துகளுக்காக நோய்களையும் உற்பத்தி செய்யும்.
உதாரணத்துக்கு, இப்போது பிரசவம் என்றாலே அது சிசேரியன் தான் என்றாகி விட்டது. இது திட்டமிட்டு பணம் பறிப்பதற்கான செயலாக மாறி விட்டது. நாற்பது வயதுக்கு மேல் உள்ள பெண்களில் பாதிப்பேருக்கு கர்ப்பப்பையை எடுத்து தூரப் போட்டாயிற்று. சமப்ந்தமில்லாமல் கூட்டம் கூட்டமாக தடுப்பூசிகளைப் போடச் செய்வது, இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். மனிதன் ஒரு முழுமையான இயங்கியல் உயிரினம் என்பதை மறுத்து அவனை ஒரு இயந்திரமாகப் பாவித்து எல்லாவற்றையும் தனித்தனியே பிரித்து வேலை பார்க்கிறது. எதிர்காலத்தில் ஒரு சமூகத்தையே ஊனமுள்ளதாக்குகிற வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. சிலர் மட்டும் செல்வம் கொழிக்க பெரும்பான்மை மக்கள் தங்கள் உயிர், பொருள், ஆவி, அனைத்தையும் இழக்கின்றனர். இது உலகளாவிய மருத்துவ மாஃஃபியாக்களால் நிர்வகிக்கப்படுகிறது… முதலாளித்துவத்தின்
அடிப்படை தத்துவப்பார்வையான லாபத்துக்காக எதை வேண்டுமானாலும்
செய்.. என்ற அடிப்படையில் உருவான நடைமுறை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.”
“ கொஞ்சம் புரியுது நெறயப் புரியல.. இதையெல்லாம்… எப்படி மாத்தறது..? “
கதிர்
உடனே மாற்றிவிடப்போவதைப் போல நாற்காலியிலிருந்து எழுந்தான்.
” உண்மையில் நமக்குத் தேவை மானுடமயமான தத்துவப்பார்வை கொண்ட மருத்துவம். அது சமூகவயமாக இருக்க வேண்டும். தெளிவான தத்துவநோக்கம் கொண்டிருக்க வேண்டும். எந்த ரகசியங்களோ, மர்மங்களோ அற்றதாக, இயற்கையின் விதிகளுக்கேற்ப செயல்படுகிற மருத்துவமாக இருக்க வேண்டும், பக்கவிளைவுகளற்ற எளிமையான, இனிமையான, முழுமையான நலத்தை மீட்டுத் தர வேண்டும்.. சுருக்கமாக, அது மக்கள் மருத்துவமாக இருக்க வேண்டும்.
ஆங்கிலமோ, சித்தாவோ, ஆயுர்வேதமோ, ஹோமியோபதியோ..யுனானியோ.. அது மக்களுக்கானதாக இருக்க வேண்டும்..”
“சரிங்க மாமா.. இப்போதிருக்கிற இந்த மருத்துவ முறைக்கு மாற்று சொல்லுங்கள்..”
“ என்னைப் பொறுத்தவரை நான் ஹோமியோபதியைத் தான் ரெகமெண்ட் பண்ணுவேன்.. ஏன்னா பெருமளவுக்கு சைடு எஃபக்ட் இல்லாதது.. அது மட்டுமல்ல நோயை விட நோயாளியை முழுமையாக உற்று நோக்கி முழுநலத்தை மீட்டெடுப்பது அது தான் என்பது என்னுடைய நம்பிக்கை…”
” நீங்க அதைத் தானே பிராக்டீஸ் பண்றீங்க. அதனாலே அதைச் சொல்றீங்க...”
“ நீ சொல்றது ஒரு வகையில சரி தான்.. ஆனா எந்த மருத்துவமுறை மக்களுக்கு எளிமையாகவும் இனிமையாகவும் அவர்களது நோய்களைக் குணப்படுத்துகிறதோ அதைத் தானே பரிந்துரைக்க வேண்டும்…”
“ மாமா ஹோமியோபதியில் எல்லாநோய்களையும் குணப்படுத்தி விடமுடியுமா? “ என்று கேலியான சிரிப்புடன் கேட்டான் கதிர்.
“ இல்லை கதிர்.. எந்த மருத்துவமுறையிலும் மனிதனின் எல்லாநோய்களையும் குணப்படுத்திவிட முடியாது…. எல்லா மருத்துவத்துக்கும் லிமிட்டேஷன் இருக்கு.ங்கிறதையும் புரிஞ்சிக்கணும்… அப்புறம் எல்லா நோய்களுக்கும் மருந்து தேவையில்லை.. உடனடி நோய்களைத் தானாகவே சரிசெய்யும் ஆற்றல் நம் உடலுக்கு உண்டு.. நம்முடைய உடலில் மிகச் சிறப்பான டிபென்ஸ் சிஸ்டம் இருக்கு… அதனுடைய வரம்பெல்லைகளை மீறும்போது தான் மருந்துகள் தேவைப்படுகின்றன… .”
“ அப்பா இப்போ மாரியப்பனுக்கு மருந்து கொடுக்கப்போறீங்களா? இல்லையா? “
என்ற
சரவணன் சிரித்துக் கொண்டே
“ அவனும் பிள்ளைத்தாச்சி மாதிரி எத்தனை நாளைக்குச் சுமப்பான்.. பிரசவிக்கணும்ல..” என்று சொன்னதைக் கேட்டு எல்லாரும் சிரித்தார்கள். மாரியப்பனுக்கு வெட்கமாகப் போய் விட்டது. அவன் முகத்தில் அசடு வழிந்தது. அதன்பிறகு சரவணின் அப்பா அவனிடம் சில கேள்விகளைக் கேட்டார். ஒரு பிரவுண் கலர் கண்ணாடிப்பாட்டிலிலிருந்து நான்கு வெள்ளை உருண்டைகளை எடுத்து அவன் வாயில் போட்டார்.
“ இது போதுமா? “ என்று சந்தேகத்துடன் கேட்டான் மாரியப்பன்.
“ போதும் தம்பி..சரியா வரலைன்னாச் சொல்லு..” என்றார் சரவணன் அப்பா.
“ அப்பா மருந்துக்குக் காசு வேண்டாமா? காசு கொடுக்கலைன்னா மருந்து வேலை செய்யாதில்ல “ என்று குசும்புடன் சரவணன் கேட்டான்.
மாரியப்பன்
விழித்தான். ஆனால் சரவணன் அப்பா,
“ ஆமாமா ..மருந்துக்குக் காசு வாங்கணும்.. எவ்வளவு வாங்கலாம்? “
எவ்வளவு
கேட்கப்போகிறாரோ என்று பயந்து கொண்டேயிருந்தான் மாரியப்பன். அவன் கையில் ஒரு ரூபாய் கூட இல்லை.
“ சரி மாரி.. மருந்துக்கு பீஸ் உங்க அம்மாகிட்டச் சொல்லி திருநெவேலி அவியல் செய்யும்போது கொண்டு வந்து கொடு.. அவங்க எப்பச் செய்றாங்களோ அப்போ கொண்டு வா.. இன்ன.. எனக்கு ஊர் ஞாபகம் வந்திருச்சி..”
என்று
சொல்லிச் சிரித்தார். அப்போது அடுக்களையிலிருந்து,
“ வரும் வரும்.. ஊர் ஞாபகம்? “ என்று சரவணனின் அம்மா ஜெயாவின் குரல் கேட்ட தும் எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
அந்தச்
சிரிப்புச்சத்தத்தில் மாரியப்பனின் கண்களைத் தூக்கம் தழுவியது. இப்போது அந்த வார்டில் அமைதி நிலவியது.

No comments:
Post a Comment