Sunday, 23 November 2025

சாலமன் அரசனும் எறும்புகளும்

 

 

சாலமன் அரசனும் எறும்புகளும்

  மலையாளத்தில் - வீணாதேவி மீனாட்சி

    தமிழில் - உதயசங்கர்



m        அடுத்த நாள் காலை ஷேம்பா ராணி அவளுடைய அரண்மனைக்குப் புறப்பட்டாள். சாலமன் ராஜாவும் பரிவாரங்களும் மரியாதைக்காக நகரவாசல்வரை வழியனுப்புவதற்காகச் சென்றார்கள்.அது எவ்வளவு அழகான ஒரு காட்சி தெரியுமா? தூய வெள்ளைக்குதிரைகளின் முதுகில் சாலமன் ராஜாவும் ஷேம்பா ராணியும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கு அருகில் அணிவகுத்த குதிரைகளுக்கு சிவப்பு, மற்றும் வயலெட்டு நிறப்பட்டில் துணி போர்த்தப்பட்டிருந்தன. வெள்ளியும் பொன்னும் மின்னும் அலங்காரகளுடன் குதிரைகளின் அணிவகுத்தன.

    

போகும் வழியில் ஒரு எறும்புப்புற்றைப் பார்த்தார்கள்.

எவ்வளவு சிறிய உயிர்கள்.. வேகமாகப் போகும்போது என்ன சொல்கிறார்கள்? “

என்று ராணி கேட்டாள்.

அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் அறிவாளியும் நற்குணங்களும் கொண்ட ராஜா இதோ வருகிறார்.. ஆனால் இப்போது அவர் நம்மை நசுக்கிக் கொன்று விட்டுப் போவார்.. என்று பேசுகின்றன..”

இப்படி குறை சொல்வதற்கு அவர்களுக்கு எப்படி தைரியம் வந்த து? இப்படிப்பட்ட ராஜாவின் கால்களில் மிதிபட்டுச் சாகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..”

என்று ராணி சொன்னாள்.

அது சரியில்லை ராணி...” என்று சாலமன் ராஜா சொன்னார். அத்துடன் குதிரையை வேறுவழியில் திருப்பினார். பாதுகாவலகளும் ராஜா செய்த து போல வேறுவழியில் பயணித்தனர். ராஜாவும் பரிவாரமும் அந்த இடத்தை விட்டு கடந்து போனார்கள். எறும்புப்புற்று எந்தச் சேதமுமில்லாமல் அப்படியே இருந்த து.

உண்மையில் உங்களைப் போன்ற கருணையுள்ள ராஜாவின் ஆட்சியின் கீழ் குடிமக்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். ஆதரவற்றவர்களையும், திக்கற்றவர்களையும் காக்கின்றவர் சிறந்த மனிதர் அல்லவா? “ என்று ஷேம்பா ராணி சொன்னார்.

எறும்புப்புற்றில் ஏராளமான எறும்புகள் நன்றிகள் சொல்லிக் கொண்டிருந்தன. ஆனால் அவற்றின் மொழியை சாலமன் ராஜாவுக்கு மட்டும் தானே தெரியும்.

நன்றி - புக் டே

No comments:

Post a Comment