Monday 24 September 2012

அதுவும் இதுவும்

terracotta-decorative-mask-M-032 உதயசங்கர்

 

எல்லாம் நிதானமாக நடந்தது

இல்லை

எல்லாம் அவசரமாக நடந்தது

எல்லாம் சுலபமாக முடிந்தது

இல்லை

எல்லாம் சிரமப்பட்டே முடிந்தது

எல்லாம் இன்பமாகவே மலர்ந்தது 

இல்லை

எல்லாம் துன்பமாகவே விடிந்தது

எல்லாம் தெளிவாகவே இருந்தது

இல்லை

எல்லாம் குழப்பமாகவே இருந்தது

எல்லாம் கிடைத்தது

இல்லை

எதுவும் கிடைக்கவில்லை

எல்லாம் இருந்தது

இல்லை

எதுவும் இல்லை.

udhaya

3 comments:

  1. இந்த இரண்டுக்கும் இடைப்பட்டது தான் வாழ்க்கை....

    அழகிய சிந்தனை

    ReplyDelete