“பீம்பேட்கா” இளையோர் நாவல் – நூல் அறிமுகம்
அமுதன் தேவேந்திரன்
ஏன் ஆப்பிரிக்காவில் மட்டும் சேப்பியன்ஸ் தோன்றினார்கள். அந்தக் காலகட்டத்தில் உலகத்துல மற்ற இடங்கள்ல மனித குரங்குகள் இல்லையா அவை எல்லாம் மனிதர்களாக மாறவில்லையா அப்புறம் இரண்டு லட்சம் வருடத்திற்கு முன்னால் இந்த பூமியில் பெரும்பாலும் தண்ணீர் தான் இருந்திருக்கு அப்புறம் எப்படி ஆப்பிரிக்காவிலிருந்து சேப்பியன்ஸ் உலகம் பூராவும் போனாங்க?
என்ற கேள்விக்கு உங்களுக்கு விடை தெரிய வேண்டுமா ஆம் எனில் மனித குல வரலாற்றையும் மனித நாகரீகத்தையும் அறிந்து கொள்ளவும் நாம் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எந்த ஊரை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எல்லாருமே ஆப்பிரிக்கா தாயின் பிள்ளைகள் என்பதை மறந்து விடக்கூடாது. . எனவும் வரலாற்றை தேடித்தேடி வாசிக்கும் கேப்டன் பாலுவும், ஆதனும் மற்றும் மதுமிதாவும் கேள்விகளை தேடி ஓடும் ஒரு பயணத்தின் கண்டுபிடிப்புகளே இந்த ‘பீம்பேட்கா’.
அதென்ன பீம்பேட்கா என்று நாவலை முழுவதும் வாசித்த பிறகு தான் தெரிய வருகிறது…
ஆதிமனிதர்கள் விட்டுச் சென்ற காலத்தில் சுவடுகள் பதிந்த இடம் பீம்பேட்கா மத்திய பிரதேசத்தில் இருக்கு இந்தியாவுக்குள் முதல் முதலாக யார் வந்து குடியேறினார்கள் கடைசியாக யார் வந்து குடியேறினார்கள் என்று வரலாற்று தகவல்களுடன் வரலாற்று ஆசிரியர்களான யுவால் நோவா ஹராரி, டோனி ஜோசப், ஆர். பாலகிருஷ்ணன் ஆகிய வரலாற்று ஆசிரியர்களும் எழுத்தாளர்களும் நமது தோள் மீது கை போட்டு சக நண்பனைப் போன்று நமக்கு வரலாற்றை கற்றுத் தருகிறார்கள் நம்முடன் உரையாடுகிறார்கள். ..
“இன்னும் நம்ம தெருவிலே சாக்கடை கால்வாய்கள் இல்லை, வீடுகளில் கழிவறை இல்லை. ஏன் இன்னும் முழுமையான கல்வி அறிவுகூட இல்லை?” என்ற கேள்வியுடன் தொடங்கும் இந்த நாவல் வரலாற்றையும் அறிவியலையும் குழந்தைகளுக்குக் கதை வடிவில் அறிமுகப்படுத்துவதோடு, சமூகத்தில் நிலவும் அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி தொடர்பான குறைகளையும் சிந்திக்க வைக்கிறது.
இந்த உலகத்தில் மனித இனம் எப்படி தோன்றியது என்று கேள்வி கேட்கும் குழந்தைகளுக்கு இந்தப் புத்தகத்தை நிச்சயமாகப் பரிந்துரைக்கலாம். வரலாற்றுடன் அறிவியல் செய்திகளையும் இணைத்து, கேப்டன் பாலு சொல்வதைப் போன்ற கதை வடிவில் ஆசிரியர் கொண்டு செல்கிறார். அதே நேரத்தில் நம்முடைய சமூகத்தில் இன்னும் தீர்க்கப்படாத அடிப்படைப் பிரச்சினைகளையும் சிந்திக்க வைக்கிறது. குழந்தைகளின் கேள்விகளுக்கும் சமூகப் புரிதலுக்கும் வழிவகுக்கும் நூலாக இதைப் பார்க்கிறேன்.
70000 வருஷத்துக்கு முன்னால தான் ஹோமோ சேப்பியன்ஸ் ஆப்பிரிக்கா விட்டு புறப்பட்டிருக்காங்க அப்போது உலகின் மற்ற பகுதிகளில் ஹோமோ சேப்பியன்ஸ் உருவாகலையா என்ற கேள்விக்கும் மனித இனங்கள் இந்த உலகத்தில் எவ்வாறு வளர்ச்சி பெற்றன எங்கெங்கே இடம் பெயர்ந்து உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள் மனிதர்கள் என்ற அறிவியலையும் வரலாற்றையும் அறிந்து கொள்ள ஒரு முறையாவது பீம்பேட்கா நாவலை வாசித்து விடுங்கள்.
இந்த நாவலை எழுதுவதற்கு கடினமான உழைப்பு இருந்திருக்கிறது என்பதை வாசிக்கும் போதே தெரிகிறது அறிவியல் பார்வையில் குழந்தைகளுக்கு புரியும் வகையில் எழுதுவது என்பது சாதாரண விஷயம் அல்ல அதுவும் எங்கும் வாசிப்பவர்களுக்கு சலிப்பு வராமல் கதையை நேர்த்தியாக அனுபவிக்க எழுத்தாளர்களால் தான் இதைப் போன்ற வரலாற்று தகவல்களும் அறிவியலும், தத்துவமும் அடங்கும் நாவல்களை எழுத முடியும் அதை சிறப்பாக செய்திருக்கிறார் எழுத்தாளர் உதயசங்கர்.
நன்றி - புக் டே
பீம்பேட்கா
வானம் பதிப்பகம்
விலை 90/
தொடர்புக்கு - 9751549992

0 Comments